அறந்தாங்கி செலக்சன் கல்வி குழுமத்தில் 19-ஆம் ஆண்டு பரிசளிப்பு விழா

அறந்தாங்கி செலக்சன் கல்வி குழுமத்தில் இன்று 19-ஆம் ஆண்டு பரிசளிப்பு விழா நிகழ்ச்சி நடைபெற்றது.நிகழ்ச்சியில் பள்ளி தாளாளர் கண்ணையன் தலைமை வகித்தார். நிகழ்ச்சியில் ஆவுடையார் கோயில் வட்டாட்சியர் மார்ட்டின் , மணமேல்குடி கடற்கரை காவல் உதவி ஆய்வாளர் ஜவஹர், வட்டார கல்வி அலுவலர் முத்துக்குமார், ரோட்டரி துணை ஆளுநர் கராத்தே கண்ணையன், அறந்தாங்கி ரோட்டரி சங்க முன்னாள் தலைவர்கள் தட்சிணாமூர்த்தி, விஜயா துரைராஜ், முன்னாள் செயலாளர்கள் ரவிசங்கர், செந்தமிழ்செல்வன், நகர்மன்ற முன்னாள் உறுப்பினர் வீராச்சாமி உட்பட பலர் கலந்து கொண்டு இந்த கல்வி ஆண்டில் நடைபெற்று முடிந்த பல்வேறு போட்டிகளுக்கு உண்டான வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசுகளை வழங்கினர்.முன்னதாக பள்ளி முதல்வர் சுரேஷ்குமார் அனைவரையும் வரவேற்றார். முடிவில் பள்ளி துணை முதல்வர் மெரைன் நன்றி கூறினார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

88 − 84 =