புதுக்கோட்டை மாவட்ட காவல்துறை அறிவிப்பு : வட்டார தளபதி ஆக பணியாற்ற வாய்ப்பு

புதுக்கோட்டை மாவட்ட ஊர்க்காவல்படை பிரிவில் காலியாக உள்ள வட்டார தளபதி(Area Commander) வட்டார தளபதி பதவிக்கு தகுதியான நபர்களிடமிருந்து விண்ணப்பங்கள் கோரப்படுகிறது. இது குறித்து புதுக்கோட்டை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அருண்சக்திகுமார் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது.

புதுக்கோட்டை மாவட்ட ஊர்க்காவல்படை பிரிவில் காலியாக உள்ள வட்டார தளபதி(Area Commander)  பதவிக்கு தகுதியான நபர்களிடமிருந்து விண்ணப்பங்கள் கோரப்படுகிறது. கல்வித்தகுதி பட்டப்படிப்பு அல்லது அதற்கு மேல் படித்தவர்களாக இருக்க வேண்டும். வயது வரம்பு 18 முதல் 50 வயதுக்குள் இருத்தல் வேண்டும். இது ஒரு கவுரவப்பதவி என்பதால் ஊதியம் ஏதும் வழங்கப்படமாட்டாது. தேசிய மாணவர் படையில் பயிற்சி பெற்ற விரிவுரையாளர்கள், ஆசிரியர்கள், மருத்துவர்கள் உயர் பதவி வகிப்பவர்கள் வட்டார தளபதி பதவியில் சேர்ந்து தொண்டு செய்ய விருப்பம் மற்றும் சேவை மனப்பான்மை உடைய ஆண், பெண் நபர்கள் விண்ணப்பிக்கலாம். வட்டார தளபதி பதவிக்கு விணப்பிக்க விரும்புவோர் விண்ணப்ப படிவத்தினை புதுக்கோட்டை மாவட்ட காவல் அலுவலக்தில் உள்ள தனிப்பிரிவு அலுவலகத்தில் பெற்றுக்கொள்ளலாம். மேலும் பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்ப படிவம், பிறப்பு சான்றிதழ், கல்விதகுதிக்கான சான்றிதழ், அரசு மருத்துவரிடம் பெறப்பட்ட மருத்துவ சான்றிதழ், 2 போட்டோக்கள் ஆகியவற்றை காவல் கண்காணிப்பாளர், புதுக்கோட்டை மாவட்டம், புதுக்கோட்டை 622001 என்ற முகவரிக்கு 15.02.2020ம் தேதிக்குள் கிடைக்குமாறு அனுப்பி வைக்க வேண்டும். 

இவ்வாறு புதுக்கோட்டை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அருண்சக்திகுமார் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

53 − = 48