டிஎன்பிஎஸ்சி மோசடி தர்மபுரியில் இருவர் கைது, இருவர் தலைமறைவு

தர்மபுரி மாவட்டத்தில் டிஎன்பிஎஸ்சி குரூப் தேர்ச்சி பெறவைத்து வேலை வாங்கி தருவதாக 30க்கும் மேற்பட்டோரிடம் ரூபாய் 1 கோடிக்கு மேல் மோசடி செய்த இருவர் கைது செய்யப்பட்டள்ளனர், அரசு பஸ் டிரைவர் உள்ளிட்ட இருவர் தலைமறைவாகியிருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தர்மபுரி மாவட்டம், பாப்பாரப்பட்டி, கடகத்தூர், செல்லியம்பட்டி உள்ளிட்ட பல்வேறு கிராமங்களில் 30க்கும் மேற்பட்டோரிடம், கிருஷ்ணகிரி மாவட்டம், பர்கூர் அடுத்த மல்லப்பாடி கிராமத்தைச் சேர்ந்த முருகன் (42) அரசு போக்குவரத்து கழகத்தில் டிரைவராக பணியாற்றி வருகிறார். இவருடைய மனைவி ஷீலா அவருடைய மைத்துனர் கோவிந்தராஜ் மற்றும் அதே ஊரை சேர்ந்த பெருமாள் மகன் திருமால்(25) ஆகிய 4 பேரும் தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் நடத்தும் குரூப் 1 குரூப் 2 குரூப் 2 ஏ மற்றும் குரூப் 4 ஆகிய தேர்வுகளில் தேர்ச்சி பெற வைத்து அரசு பணி வாங்கி தருவதாக ஒவ்வொருவரிடமும் ஐந்து லட்சம், 7 லட்சம், 3 லட்சம் வீதம் சுமார் ஒரு கோடி ரூபாய்க்கும் மேல் வாங்கி உள்ளதாக கூறப்படுகிறது. கடந்த ஆறு மாதங்களாக பணம் கொடுத்தவர்களுக்கு வேலை வாங்கி கொடுக்கவில்லை. பணத்தை திரும்ப தாருங்கள் என்று பலமுறை பணம் கொடுத்தவர்கள் கேட்டும் அவர்கள் பணமும் கொடுக்கவில்லை என சொல்லப்படுகிறது.

இதுகுறித்து தர்மபுரி நகர காவல் நிலையத்தில் காவல் ஆய்வாளர் ரத்தினகுமாரிடம் பாதிக்கப்பட்டவர்கள் புகார் அளித்தனர். புகாரின் பேரில் போலீசார் மல்லபாடி கிராமத்தில் இருந்த ஷீலா மற்றும் திருமால் ஆகியோரை கைது செய்தனர். மேலும் தலைமறைவாக உள்ள அரசு பஸ் டிரைவர் முருகன் மற்றும் அவருடைய மைத்துனர் கோவிந்தராஜ் ஆகியோரை வலைவீசி தேடி வருகின்றனர். இதில் அதிக அளவில் பாதிக்கப்பட்டவர்கள் மாற்றுத்திறனாளிகளாவர். மேலும் இந்த சம்பவத்தில் தொடர்புடையதாக சந்தேகிக்கப்படும் நாகராஜ் என்பவரிடமும் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

34 + = 42