இரண்டாயிரத்து 335 முறை பாகிஸ்தான் அத்துமீறல்

புதுடில்லி: இந்திய -பாக்., எல்லையில் பாகிஸ்தான் படையினர் 2 ஆயிரத்து 335 முறை அத்துமீறி இருப்பதாக ராஜ்யசபாவில் பாதுகாப்பு துறை இணை அமைச்சர் ஸ்ரீபத் நாயக் கேள்வி ஒன்றுக்கு அளித்த பதிலில் கூறியுள்ளார்.

இது தொடர்பாக எழுப்பப்பட்ட கேள்விக்கு அவர் அளித்த பதில் வருமாறு: கடந்த 2019 மே மாதம் 30 ம் தேதி முதல் 2020 ஜனவரி 20 வரையில் அமைதி ஒப்பந்த மீறல்கள் மொத்தம் 2,335 நடந்துள்ளது. ஜம்முவை ஒட்டிய இந்திய- பாக்., எல்லையில் 177 துப்பாக்கிச்சூடு சம்பவமும், இதில் 8 ராணுவ வீரர்கள் பலத்த காயமுற்றுள்ளனர்.

2019 ஆகஸ்ட், செப்டம்பர், அக்டோபர் ஆகிய 3 மாதங்களில் மட்டும் 950 அத்துமீறல்கள் நடந்துள்ளன. நமது தரப்பிலும் ராணுவ வீரர்கள் பதிலடி கொடுத்துள்ளனர். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

− 7 = 2