நிலம் கொடுக்க மறுப்பு: பள்ளி ஆசிரியை ஒருவரைக் கயிற்றால் கட்டி இழுத்து வந்து அடைத்து வைத்த பயங்கரம்

மேற்கு வங்க மாநிலத்தில் நிலம் ஒன்றைக் கையகப்படுத்த உயர்நிலைப் பள்ளி ஆசிரியை ஒருவரை சிலர் கைகால்களை கட்டி கொஞ்ச தூரம் தரதரவென இழுத்து வந்து வீட்டினுள் அடைத்து வைத்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கிராம சாலை ஒன்றிற்காக இந்த ஆசிரியையின் வீட்ட கையகப்படுத்த திரிணமூல் கட்சியைச் சேர்ந்தவர்கள் சிலர் இந்த அராஜகத்தில் ஈடுபட்டதாக நேரில் பார்த்தவர்கள் சிலர் தெரிவித்தனர்.

மேற்கு வங்கத்தின் தெற்கு தீனஜ் பூர் மாவட்டத்தில் நந்தன்பூர் பஞ்சாயத்தில் இந்தச் சம்பவம் நடந்துள்ளது. ஆளும் திரிணமூல் காங்கிரஸ் கட்சியினர்தான் இதற்குக் காரணம் என்பது தெரியவந்துள்ளது

திரிணமூல் கட்சியைச் சேர்ந்த அமல் சர்க்கார் என்பவர்தான் இந்த அராஜகச் செயலை தலைமையேற்று நடத்தியதாகப் புகார் எழுந்துள்ளது ஆசிரியையின் சகோதரி இதற்கு எதிர்ப்புத் தெரிவிக்க, அவரையும் பிடித்துத் தள்ளியுள்ளனர் இவர்கள். இதனையடுத்து அமல் சர்க்காரை கட்சி சஸ்பெண்ட் செய்துள்ளது.

அமல் சர்க்கார் மாயமானதையடுத்து இந்த பயங்கரத்தில் ஈடுபட்ட 2 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

ஸ்மிருதிகோனதாஸ் என்ற இந்த ஆசிரியை மரூன் நிற மேக்சியில் கைகால்கள் கட்டப்பட்ட நிலையில் தரதரவென இழுத்துச் செல்லப்படும் காட்சி சமூகவலைத்தளத்தில் வைரலானது. இவரது முழங்காலில் கயிற்றைக் கட்டி கைகளைப் பிடித்து கர்ண கொடூரமான முறையில் இழுத்துச் செல்லப்பட்டு அடைக்கப்பட்டுள்ளார்.

இவர்கள் வீட்டின் முன் கட்டப்படும் சாலை 12 அடி அகலமுடையதாகும். இதற்காக தங்கள் நிலத்தின் சிறுபகுதியைத் தர ஆசிரியை ஒப்புக் கொண்டுள்ளார், ஆனால் 24 அடியாகச் சாலை அகலத்தைக் கூட்டவே மேலும் நிலப்பகுதியை ஆசிரியை இழக்க நேரிட்டுள்ளது.

அவர் கூடுதல் நிலம் தர மறுத்தார். அதன் விளைவுதான் திரிணமூல் குண்டர்கள் ஆசிரியையை கட்டி இழுத்து சென்ற சம்பவம். இப்போது ஸ்மிருதிகோனதாஸ் போலீஸ் புகார் அளித்துள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

9 + 1 =