விவசாய துறைக்கு 2.83 லட்சம் கோடி ஒதுக்கீடு தான்ய லக்ஷ்மி என்ற திட்டம் பட்ஜெட்டில் அறிவிப்பு

நாடாளுமன்றத்தில் மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்த பட்ஜெட்டில் இடம் பெற்றுள்ள முக்கிய அம்சங்கள் வருமாறு:

*2022க்குள் விவசாயிகளின் வருமானம் இரட்டிப்பாகும்

  • ரசாயன உரங்கள் அதிகளவில் பயன்படுத்துவதை கட்டுப்படுத்கப்படும்.
  • விவசாயிகளுக்கு 15 லட்சம் கோடி கடன் வழங்க இலக்கு

*விவசாயத்தை மேம்படுத்த 16 அம்ச திட்டங்கள் கொண்டு வரப்படும்

*மத்திய பட்ஜெட் தாக்கல் – கடந்தாண்டைவிட நடப்பாண்டில் கடன் குறைக்கப்பட்டுள்ளது

*விவசாயத்தில் பெண்களை ஈடுபடுத்த ஊக்கப்படுத்தும் தான்ய லக்ஷ்மி திட்டம் அறிவிப்பு

  • சூரிய ஓளியில் மின்சாரம் தயாரிக்கும் இயந்தரம் அமைக்க ரூ.20 லட்சம் விவசாயிகளுக்கு நிதியுதவி

*விதைகளை சேமித்து விநியோகிக்கும் தானியலட்சுமி என்ற திட்டத்தில் கிராமப்புற பெண்கள் ஈடுபடுத்தப்படுவார்கள்.

*தண்ணீர் பற்றாக்குறையை உள்ள 100 மாவட்டங்களில் தனிக்கவனம் செலுத்தப்படும்

*பிரதமரின் பயிர் காப்பீடு திட்டத்தில் 6.11 கோடி விவசாயிகள் பயன் பெற்றுள்ளனர்

  • விவசாய விளைபொருட்கள் கொண்டு செல்லும் செலவை குறைக்க நடவடிக்கை

*விவசாய துறைக்கு 2.83 லட்சம் கோடி ஒதுக்கீடு

*20 லட்சம் விவசாயிகள் சோலார் பமபுகள் அமைக்க உதவி செய்யப்படும்

*அனைத்து வகையான உரங்களையும் சமமாக பயன்படுத்த நடவடிக்கை

*வேளாண் சந்தையை தாராளமயமாக்கப்படும்

*விவசாயிகளின் வருமானத்தை இரட்டிப்பாக்க அரசு தீவிரமாக உள்ளது.

  • மாவட்ட வாரியாக தோட்டகலைத்துறை பொருட்கள் உற்பத்திக்கு முக்கியத்துவம்

*கடந்த 6 ஆண்டுகளில் நாட்டின் கடன் ஜிடிபி 52 % இருந்து 48% குறைந்துள்ளது

முன்னதாக, தனது உரையின் தொடக்கத்தில் “சலிமார் பூங்காவை போன்றது இந்தியா. தால் ஏரியில் உள்ள தாமரை மலரை போன்றது நம் நாடு, உலகத்திலேயே சிறந்த நாடு இது, ” என்ற காஷ்மீர் கவிதையை இந்தியில் வாசித்தார் நிர்மலா சீதாராமன்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

69 − = 65