கோரோனோ பலி தொடர்ந்து அதிகரிப்பு! மேலும் பல நாடுகளுக்கு பரவுவதால் பீதி

சீனாவில் உருவான கோரனோ வைரசுக்கு பலியானோர் எண்ணிக்கை 80 ஆக அதிகரித்துள்ளது. மேலும், 7-க்கும் மேற்பட்ட நாடுகளுக்கு பரவியுள்ளதால், மக்களிடையே பீதி அதிகரித்துள்ளது.

சீனாவின் உகான் நகரில் வசிக்கும் சிலரை, கடந்த மாத இறுதியில் கொரோனா எனப்படும் கொடிய வைரஸ் தாக்கியது. இந்த வைரசால் புதுவித நிமோனியா நோய்க்கு ஆட்பட்ட அவர்கள் அடுத்தடுத்து மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டனர். அதன் பிறகு, இந்த நோய் தீவிரமடைந்து உயிரிழப்புகள் ஏற்பட்டன.

கோரனோ வைரசுக்கு பலியானோர் எண்ணிக்கை, சீனாவில் 80ஐ கடந்துள்ளது. மேலும், இரண்டாயிரத்து 700க்கும் மேற்பட்டோருக்கு இந்நோயின் பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

வூஹானில் உள்ள அமெரிக்கர்களை சான்பிரான்சிஸ்கோவுக்கு அனுப்புவதற்கான நடவடிக்கையை சீன அரசு தொடங்கியுள்ளது. இதனால் இந்திய மாணவர்களும் நாடு திரும்பும் வாய்ப்பு உருவாகியுள்ளது. மேலும் நோய் பரவாமல் தடுக்க சீனாவில் இருந்து வெளியிடங்களுக்கு விலங்குகள், இறைச்சி போன்றவற்றை வர்த்தகம் செய்வதற்கும் சீன அரசு தடை அறிவித்துள்ளது.

அமெரிக்கா உள்ளிட்ட ஏழு நாடுகளுக்கு கோரனோ வைரஸ் பரவியுள்ளது. அமெரிக்காவில் 5 பேருக்கு இந்நோய்க்கூறு பரவியதும் உறுதி செய்யப்பட்டுள்ளது. இதையடுத்து, பல்வேறு விமான நிலையங்களில் மருத்துவ சோதனை முகாம்கள் அமைக்கப்பட்டுள்ளன. உலகின் பல்வேறு நாடுகளில் இந்த வைரஸ் குறித்த பதற்றம் பரவி வருகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

46 − 45 =