குடியரசு தின விழா அணிவகுப்பில் இடம்பெறும் தமிழகத்தின் ‘அய்யனார்’!

டெல்லியில் நாளை நடைபெறவுள்ள குடியரசு தின விழா அணிவகுப்பில், தமிழகம் சார்பில் இடம் பெறும் அலங்கார ஊர்தியில் தமிழகத்தின் அய்யனார் சிலை இடம் பெறுகிறது.

குடியரசு தின விழாவை முன்னிட்டு, டெல்லி ராஜ்பாத்தில், நாளை ராணுவத்தினரின் மிடுக்கான அணிவகுப்புகள், சாகசங்கள், ராணுவ வலிமையை பறைசாற்றும் ஊர்திகளின் அணிவகுப்புகள் இடம் பெற உள்ளது.

அதேபோல், பல்வேறு மாநிலங்களின் கலாச்சார மற்றும் பாரம்பரியத்தை வெளிப்படுத்தும் அலங்கார ஊர்திகளின் அணி வகுப்பும் இதில் இடம் பெறவுள்ளன. இந்த ஆண்டு 22 அணிவகுப்பு ஊர்திகளுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

இதில், தமிழகம் சார்பில் இடம் பெறப் போகும் அலங்கார அணி வகுப்பில், தமிழகத்தில் காவல் தெய்வமாக போற்றப்பட்டு வரும் அய்யனார் சிலை காட்சிப்படுத்தப்படுகிறது. சிவப்பு வண்ணம், பெரிய மீசை என 17 அடி உயரம் கொண்ட பிரமாண்ட சிலை, இந்த அணி வகுப்பில் இடம் பெற உள்ளது.

இந்த சிலை, அய்யனார் அமர்ந்திருக்க, அவருக்கு முன்னால் குதிரையும், காவலாளிகளும் இருப்பது போல் வடிவமைக்கப்பட்டுள்ளது. அலங்கார ஊர்தி செல்லும் போது கரகாட்டம் மற்றும் தப்பாட்டம், கலை நிகழ்ச்சிகளும் நடைபெறும். இதற்காவே, தமிழகத்திலிருந்து 30 கலைஞர்கள் டெல்லிக்கு சென்று ஒத்திகையில் ஈடுபட்டுள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

56 − 51 =