காஞ்சிபுரம் அருகே பெரியார் சிலை உடைப்பு மர்ம நபர்களுக்கு போலீஸ் வலைவீச்சு

காஞ்சிபுரம் அருகே பெரியார் சிலையை மர்ம நபர்கள் சேதப்படுத்தினர். அவர்களை போலீசார் தேடி வருகின்றனர்.

காஞ்சிபுரம் மாவட்டம் உத்திரமேரூர் அடுத்துள்ள சாலவாக்கம் காவல் நிலையத்துக்கு உட்பட்ட கலியபேட்டை என்னுமிடத்தில் பெரியார் சிலை உள்ளது.

அந்த சிலையை மர்ம நபர்கள் சேதப்படுத்தியுள்ளனர். இது அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது. இதில் ஈடுபட்ட மர்ம நபர்களை தேடி வருகின்றனர். அப்பகுதியில் போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.

பெரியார் தொடர்பான ரஜினியின் கருத்துக்கு பிறகு பெரியார் ஆதரவாளர்கள் – எதிர்ப்பாளர்கள் இடையே கருத்து மோதல்கள் நிலவி வரும் சூழலில், இந்த சிலை உடைப்பு சம்பவம் முக்கியத்துவம் பெறுகிறது.

இச்சம்பவத்திற்கு திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் உள்ளிட்ட பலரும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

72 − = 68