ரஜினிக்கு எதிராக தொடரப்பட்ட அனைத்து வழக்குகளையும் தள்ளுபடி செய்தது உயர்நீதிமன்றம்

தந்தை பெரியார் குறித்து கருத்து தெரிவித்த நடிகர் ரஜினிகாந்துக்கு எதிராக தொடரப்பட்ட மனுக்களை சென்னை உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்து உத்தரவிட்டது.

துக்ளக் இதழின் 50-ஆண்டு விழா சென்னையில் நடைபெற்றது. இதில் பேசிய ரஜினிகாந்த், பெரியார் குறித்து கருத்து தெரிவித்திருந்தார். இதற்கு, பெரியார் ஆதரவாளர்கள் பலர் கண்டனம் தெரிவித்த வந்தனர்; ரஜினிக்கு எதிராக பெரியார் திராவிடர் கழகம் உள்ளிட்டவை நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தன.

இந்த மனு உயர் நீதிமன்றத்தில் நீதிபதி ராஜமாணிக்கம் அமர்வு முன்று இன்று விசாரணைக்கு வந்தது. புகார் கொடுத்த 15 நாட்கள் முடிவதற்குள் முன்னதாகவே நீதிமன்றத்தை அணுகியது ஏன்..? என நீதிபதி கேள்வி எழுப்பினார்.

புகார் மீது நடவடிக்கை எடுக்க காவல்துறைக்கு கால அவகாசம் வழங்கிய பின் மேஜிஸ்ட்ரேட் நீதிமன்றத்தை தான் மனுதாரர்கள் அணுகி இருக்க வேண்டும் என்று நீதிபதி ராஜமாணிக்கம் கூறினார்.

இந்த மனுக்கள் விசாரணைக்கு பட்டியலிடபட்டதே தவறு என்று கூறினர். இதனை அடுத்து, மனுக்கள் வாபஸ் பெற்றதை தொடர்ந்து , அனைத்து மனுக்களும் தள்ளுபடி செய்யப்பட்டன.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

− 5 = 3