மூடப்பட்ட தொழிற்சாலைகளை மீண்டும் திறக்க நடவடிக்கை: முதல்வர் பழனிச்சாமி

தமிழகத்தில் மூடப்பட்டுள்ள தொழிற்சாலைகளை மீண்டும் திறக்க அரசு நடவடிக்கை எடுக்கும் என்று முதல்வர் பழனிச்சாமி தெரிவித்தார்.

சென்னை தரமணியில் டிஎல்எஃப் நிறுவனத்தின் கட்டுமான பணிகளை முதல்வர் பழனிசாமி இன்று தொடங்கி வைத்தார். இந்த நிகழ்ச்சியில் அவர் பேசியதாவது: தமிழகம் தொழில் துறையில் நாட்டிலேயே முன்னையில் உள்ளது; சிறந்து விளங்குகிறது.

தமிழகத்தில் தொழில் தொடங்குவதற்கான ஒற்றை சாளர முறைக்கு, நல்ல வரவேற்பு உள்ளது. தமிழகத்தில் தொழில்துறையில் பல்வேறு வேலைவாய்ப்புகள் உருவாக்கப்பட்டு வருகிறது. 69 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் மூலம் 80,000-க்கும் மேற்பட்ட வேலைவாய்ப்புகள் உருவாக்கப்பட்டுள்ளது.

மூடப்பட்ட தொழிற்சாலைகளை மீண்டும் திறக்க அரசு நடவடிக்கை எடுக்கும். தூத்துக்குடியில் அமையவுள்ள நவீன சுத்திகரிப்பு ஆலை மூலம் தென் மாவட்டங்கள் வளர்ச்சி பெறும். டி.எல்.எஃப் நிறுவனத்தின் முதலீடு மூலம் தகவல் தொழில்நுட்ப துறையில் 70 ஆயிரம் பேருக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும் என்றார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

15 − = 9