நல்ல மனிதருக்கு காவல் அதிகாரி பாராட்டு

திருமயம் பேருந்து நிலையம் பகுதியில் கேட்பாரற்று கிடந்த மணி பர்சை உரியவரிடம் ஒப்படைத்த நாடியம்மாளுக்கு காவல் துறை சார்பில் வாழ்த்து தெரிவிக்கப்பட்டது.

புதுக்கோட்டை மாவட்டம் திருமயம் அருகே கேட்பாரற்றுக் கிடந்த மணிபர்சில் 14 சவரன் தங்க நகையும், இரண்டு சவரன் தங்க வளையலும், ஒரு மோதிரமும் ரூபாய் 500 உள்ள மணி பரிசை திருமயத்தைச் சேர்ந்த நாடியம்மாள் கண்டறிந்து எடுத்துள்ளார். உடனே திருமயம் ஊராட்சிமன்ற தலைவர் சிக்கந்தர் அவர்களிடம் ஒப்படைத்து அதை இருவரும் சேர்ந்து திருமயம் காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர். அதனை பொருளின் உரிமையாளரான திருமயம் அம்மாபட்டி கிராமத்தைச் சேர்ந்த திருமதி மீனாள் அவர்களிடம் பொன்னமராவதி உட்கோட்டம் காவல் துணைக்கண்காணிப்பாளர் தமிழ்மாறன் மற்றும் திருமயம் காவல் ஆய்வாளர் மனோகர் ஆகியோர் தலைமையில் ஒப்படைக்கப்பட்டது. மேலும் சிக்கந்தர் மற்றும் நாடிஅம்மாள் அவர்களின் நேர்மையை காவல் துணைக் கண்காணிப்பாளர் தமிழ்மாறன் மற்றும் திருமயம் காவல் ஆய்வாளர் ஆகியோர் வெகுவாக பாராட்டி கௌரவித்தார்கள்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

+ 52 = 54