சபரிமலையில் தோன்றிய மகரஜோதி! சரண கோஷம் முழங்க பக்தர்கள் தரிசனம்

சபரிமலை பொன்னம்பலமேட்டில் தென்பட்ட மகரஜோதி தரிசனத்தை, பல ஆயிரம் பக்தர்கள் சரண கோஷம் முழங்க தரிசித்து வழிபட்டனர்.

கேரள மாநிலம் சபரிமலையில் உள்ள ஸ்ரீ ஐயப்பன் கோவிலில் மண்டல மற்றும் மகர விளக்கு பூஜைகள் விமரிசையாக நடைபெற்று வருகிறது. இந்தாண்டு, மகரவிளக்கு பூஜைக்காக கடந்த டிசம்பர் மாதம் 30-ஆம் தேதி கோவில் நடை திறக்கப்பட்டது.

மகரவிளக்கு பூஜையின்போது ஐயப்பனுக்கு அணிவிக்கப்படும் திருவாபரணங்கள் அடங்கிய பெட்டி மாலை 6.30 மணிக்கு சன்னிதானத்தை சென்றடைந்தது. அதை தொடர்ந்து திருவாபரணங்களை பூட்டி ஐயப்பனுக்கு விசேஷ தீபாராதனை காட்டி மகர விளக்கு பூஜை நடைபெற்றது.

அதே நேரத்தில் சபரிமலையில் உள்ள பொன்னம்பல மேட்டில் மகரஜோதி தெரிந்தது. இதை பல ஆயிரம் பக்தர்கள், சாமியே சரணம் ஐயப்பா என்று சரண கோஷங்கள் முழங்க, தரிசித்து வழிபட்டனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

+ 3 = 9