போகியன்று பொருட்களை எரித்து காற்றை மாசுபடுத்தக்கூடாது: மாசு கட்டுப்பாடு வாரியம்

போகி பண்டிகையின் போது, பொருட்களை எரித்து காற்றை மாசுபடுத்துவோர் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என மாசு கட்டுப்பாடு வாரியம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

பொங்கல் பண்டிகைக்கு முன்தினமான நாளிய, போகிப் பண்டிகை கொண்டாடப்படுகிறது. பழையன கழிதலும், புதியன புகுதலும் என்ற அடிப்படையில், இந்நாளில் பழைய மற்றும் தேவையற்ற பொருட்களை எரிப்பது வழக்கம்.

ஆனால் சிலர், பிளாஸ்டிக் பொருட்கள் , ரப்பர் போன்றவற்றை எரித்து, சுற்றுச்சூழலை மாசுபடுத்துகின்றனர். இதனால், வயதானவர்கள், குழந்தைகள் மூச்சுத்திணறல் உள்ளிட்ட பாதிப்புக்கு உள்ளாகின்றனர்.

இதையடுத்து, பிளாஸ்டிக் பொருட்கள், செயற்கை இழைகளால் தயாரிக்கப்பட்ட துணிகள், ரப்பர் பொருட்கள், பழைய டயர் மற்றும் ட்யூப் போன்றவற்றை எரிக்கக் கூடாது என்று மாசு கட்டுப்பாடு வாரியம் வலியுறுத்தியுள்ளது.

இந்த நிலையில், நாளை போகி கொண்டாடப்படும் நிலையில், கண்காணிப்புப் பணியில் ஈடுபட காவல்துறை உதவியுடன் 15 குழுக்கள் மாசு கட்டுப்பாடு வாரியத்தால் அமைக்கப்பட்டுள்ளது. காற்றை மாசுபடுத்தும் பொருட்களை எரிப்போர் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் மாசு கட்டுப்பாட்டு வாரியம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

அத்துடன், சென்னை மாநகரத்தின் சுற்றுச்சூழல் காற்று தரத்தினை கண்காணிப்பு செய்வதற்காக மாசு கட்டுப்பாட்டு வாரியம் சார்பில் 15 இடங்களில் 24 மணி நேரமும் காற்று தரத்தினை கண்காணித்து காற்று மாதிரிகளை சேகரித்து ஆய்வு மேற்கொள்ளவுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

+ 13 = 14