ஓமன் சுல்தான் மறைவிற்கு ஐநா பொதுச் செயலாளர் இரங்கல்

அரேபிய வரலாற்றில் நீண்ட காலமாக ஆட்சியாளராக இருந்தவர் சுல்தான் காபூஸ் பின் சையத் அல் சையத். ஓமன் நாட்டின் சுல்தானான கபூஸ் பின் சையத் இயற்கை எய்தினார். கபூஸின் மறைவிற்கு பல்வேறு உலக தலைவர்களும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். 
இந்நிலையில், ஓமன் சுல்தான் மறைவிற்கு ஐநா பொது செயலாளர் அண்டோனியோ குட்டரஸ் இரங்கல் தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக, அண்டோனியோ குட்டரசின் செய்தி தொடர்பாளர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது:
ஓமன் சுல்தான் காபூஸ் பின் சையத் மறைவுக்கு ஐ.நா. சபை பொதுச் செயலாளர் அரச குடும்பத்திற்கும், அரசாங்கத்திற்கும், ஓமன் நாட்டு மக்களுக்கும் தனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறார் என குறிப்பிட்டுள்ளார்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

7 + 2 =