குமரியில் மீண்டும் காவலர்கள் மீது தாக்குதல்

கன்னியாகுமரி மாவட்டம் இரணியனில் இரவு ரோந்து பணிக்கு சென்ற காவலர்கள் மீது 5 பேர் கொண்ட கும்பல் தாக்குதல் நடத்தி உள்ளது.

கன்னியாகுமரி மாவட்டம் களியக்காவிளையில் சிறப்பு எஸ்.ஐ., வில்சன் மர்ம கும்பலால் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.இந்த பரபரப்பு அடங்குவதற்குள் குமரியில் மீண்டும் காவலர்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. இரணியல் பகுதியில் நேற்று இரவு ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த ரெஜி மற்றும் ஐயப்பதாஸ் ஆகியோர் மீது 5 பேர் கொண்ட கும்பல் தாக்குதல் நடத்தியது.

தாக்குதல் நடத்திய அருண், சுனில்குமார், ரமேஷ், தினேஷ், அஜித் ஆகியோர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. காவலர்களை தாக்கிய 5 பேரையும் போலீசார் தேடி வருகின்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

3 + 7 =