இனிமேல் இப்போதைக்கு மழை இல்லை! விடைபெறுகிறது வடகிழக்கு பருவமழை

தமிழகத்தில், அடுத்த 24 மணி நேரத்தில் வடக்கிழக்கு பருவமழை முற்றிலுமாக விலகும் என சென்னை வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது.

இது குறித்து, சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குனர் புவியரசன் கூறியதாவது: தமிழகம் மற்றும் புதுவையில், அடுத்த 4 நாட்களுக்கு வறண்ட வானிலையே நிலவும்; பெரும்பாலான மாவட்டங்களில் காலையில் பனிப்பொழிவு காணப்படும்.

தமிழகத்தில், அடுத்த 24 மணி நேரத்தில் வடக்கிழக்கு பருவமழை முற்றிலுமாக விலகும் என இந்தாண்டு வடகிழக்கு பருவமழை இயல்பை விட இரண்டு விழுக்காடு அதிகமாக பொழிந்துள்ளது. சென்னையை பொறுத்தவரை டிசம்பர் வரை, 16 சதவீதம் மழை குறைவாகவே பெய்துள்ளது.

நீலகிரியில் 64%, ராமநாதபுரம் மற்றும் நெல்லையில் தலா 45%, தூத்துக்குடியில் 31%, கோவையில் 29%அதிக மழை பதிவாகி உள்ளது. மதுரை, பெரம்பலூர், திருவண்ணாமலை, வேலூர் ஆகிய மாவட்டங்களில் மழைப்பதிவு குறைந்துள்ளது என்றார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

91 − 85 =