பெட்ரோல் பங்க் உடை மாற்றும் அறையில் ரகசிய கேமரா! ஆதாரம் வைத்திருந்தவர் மீது தாக்குதல்

கோவையில் பெட்ரோல் பங்க்கில் பணியாற்றும் பெண்கள் உடை மாற்றுவதை ரகசிய கேமராவில் வீடியோ எடுத்தது தொடர்பாக புகார் அளித்தவர் மீது, நிர்வாகம் தரப்பில் பெட்ரோல் திருடியதாகக் கூறி, தாக்கியதாக கூறப்படும் சம்பவம், பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

கோவை கண்ணப்ப நகர் பகுதியை சேர்ந்தவர் மணிகண்டன். அவரது மனைவி சபிதா. இருவரும் சாய்பாபா காலனி அருகே ரூட்ஸ் நிறுவனத்தின் பெட்ரோல் பங்க்கில் பணியாற்றி வருகின்றனர். இந்நிலையில், ரூட்ஸ் நிறுவன அதிகாரிகள் தாக்கியதாக கூறி, மணிகண்டன் இன்று கோவை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

கடந்த 4 மாதங்களுக்கு முன், பெட்ரோல் பங்க் சூபர்வைசராக இருந்த சுபாஷ் என்பவர், பெண்கள் உடை மாற்றும் அறையில் ரகசிய கேமரா பொருத்தி, அவர்கள் உடை மாற்றுவதை வீடியோ எடுத்தாகவும், இதுதொடர்பாக அதிகாரிகளிடம் புகார் அளித்ததை தொடர்ந்து சுபாஷ் நீக்கப்பட்டதாகவும் மணிகண்டன் தெரிவித்தார்.

இதனால் பழிவாங்கும் நோக்கில் பங்க் தரப்பு அதிகாரிகளே, பெட்ரோல் திருட சொல்லி வீடியோ எடுத்து மிரட்டியதோடு, நிறுவன இயக்குநர் கவிதாசன், மேலாளர் சங்கர்கனேஷ், மக்கள் தொடர்பு அதிகாரி சரவணன் ஆகியோர் தாக்கியதாகவும் அவர் கூறினார்

இதுகுறித்து ரூட்ஸ் நிறுவன இயக்குநர் கவிதாசனிடம் கேட்ட போது, மணிகண்டனை தாக்கவில்லை என மறுப்பு தெரிவித்தார். மேலும், 4 மாதங்களுக்கு முன்பு நடந்த வீடியோ விவகாரத்திற்கும், இப்பிரச்சனைக்கும் எவ்வித தொடர்பும் இல்லை.

பெட்ரோல் திருடிய மணிகண்டனை பிடித்து சாய்பாபா காலனி காவல் நிலையத்தில் ஒப்படைத்தோம். அதற்கான சிசிடிவி வீடியோ காட்சிகளையும் காவல் நிலையத்தில் ஒப்படைத்ததாக, அவர் தெரிவித்தார். இச்சம்பவம் கோவையில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

9 + = 18