தமிழக சட்டப்பேரவை கூட்டம் தொடங்கியது – திமுக உறுப்பினர்கள் வெளிநடப்பு

தமிழக சட்டப்பேரவை கூட்டத்தொடர் தொடங்கியது. ஆளுநர் உரையை தொடங்கிய போது திமுக உறுப்பினர்கள் குறுக்கிட்டு, அமளியில் ஈடுபட்டனர்.

15வது சட்டப்பேரவையின் 8ஆவது கூட்டத்தொடர் தொடங்கியது. தமிழக சட்டசபை கூட்டத்தொடர் ஆளுநர் உரையுடன் தொடங்கியது. அனைவருக்கும் வணக்கம் என்று கூறி ஆளுநர் பன்வாரிலால் புரோகித் உரையை தொடங்கினார்.

அப்போது திமுக தலைவர் ஸ்டாலின் உள்ளிட்ட உறுப்பினர்கள் குறுக்கிட்டனர். தொடர்ந்து அமளியில் ஈடுபட்ட திமுகவினர், ஆளுநர் உரையை புறக்கணித்து வெளிநடப்பு செய்தனர்.

நிறைவடைந்த பின், கூட்டத் தொடரை எத்தனை நாட்கள் நடத்துவது என்பது குறித்து சபாநாயகர் தலைமையில் கூடும் அலுவல் ஆய்வுக்குழுக் கூட்டத்தில் முடிவு செய்யப்படும்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

4 + 4 =