முன்னாள் சபாநாயகர் பி.எச். பாண்டியன் உடல்நலக்குறைவால் காலமானார்

முன்னாள் சபாநாயகர் பி.எச். பாண்டியன், உடல் நலக்குறைவால் சென்னையில் இன்று காலமானார். அவருக்கு வயது 74.

சில நாட்களாக உடல் நலமின்றி இருந்த அவர், சென்னை போரூரில் ஊள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். அங்கு சிகிச்சை பலனின்றி இன்று இறந்தார்.

அதிமுகவை சேர்ந்த பி.எச். பாண்டியன், மூத்த வழக்கறிஞர் ஆவார். கடந்த 1977,80,84,89 ஆகிய நான்கு முறை நெல்லை, சேரன்மகாதேவி சட்டசபை இருந்து தேர்ந்தெடுக்கப்பட்டவர்.

கடந்த 1980 ஆம் ஆண்டு முதல் 1985 ஆம் ஆண்டு வரை தமிழக சட்டசபை துணை சபாநாயகராக பதவி வகித்த பி.எச். பாண்டியன், முன்னாள் முதலமைச்சர் எம்ஜிஆர் மறைவுக்கு பிறகு ஜானகி அணியில் இருந்து, 1989 ஆம் ஆண்டு எம்.எல்.ஏ.ஆக வெற்றி பெற்றார்.

கடந்த 1999இல், திருநெல்வேலி மக்களவைத் தொகுதியிலிருந்து எம்.பி.ஆகவும் நாடாளுமன்றத்திற்கு சென்றவர். தற்போது வரை அதிமுகவில் அமைப்புச் செயலாளராக பதவியில் இருந்து வந்தார்.

பி.எச் பாண்டியனின் மனைவி சிந்தியா பாண்டியா சில ஆண்டுகளுக்கு முன் இறந்தார். 4 மகன்கள், ஒரு மகள் உள்ளனர். அவரது மகன் மனோஜ் பாண்டியன், தற்போது அதிமுகவில் இருந்து வருகிறார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

7 + = 15