உள்ளாட்சி தேர்தல்: 4 மணி நிலவரம் இதுதான்! சம பலம் காட்டும் அதிமுக- திமுக!

ஊரக உள்ளாட்சி தேர்தல் வாக்கு எண்ணிக்கையில், மாலை 4 மணி நிலவரப்படி முன்னிலை நிலவரத்தில் அதிமுகவும், திமுகவும் கிட்டத்தட்ட சமபலத்தை காட்டி வருகின்றன.

அமமுக ஓரிரு இடங்களில் வெற்றி பெற்றுள்ள நிலையில், நாம் தமிழர் கட்சி எண்ணிக்கையை தொடங்கவில்லை.

மாலை 4மணி நிலவரப்படி அதிமுக கூட்டணி, மாவட்ட கவுனர்சிலர் பதவிகளில் 121 இடங்களில் முன்னிலை வகித்தது. திமுக கூட்டணி, 138 இடங்களில் முன்னிலை பெற்றிருந்தது.

ஒன்றிய கவுன்சிலர் பதவிகளை பொருத்தவரை, அதிமுக கூட்டணி 470 இடங்களையும், திமுக கூட்டணி 441 இடங்களிலும் முன்னிலை பெற்றிருந்தது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

+ 53 = 57