5 டிரில்லியன் டாலர் பொருளாதார மதிப்பு என்ற இலக்கை எட்டுவோம்- அமைச்சர் நிர்மலா சீதாராமன்

இந்தியா, 5 டிரில்லியன் டாலர் பொருளாதார மதிப்பு என்ற இலக்கை எட்டும் என்று, மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்தார்.

இது குறித்து, டெல்லியில், செய்தியாளர்களிடம் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் கூறியதாவது:

இந்தியாவை, 2024ஆம் ஆண்டில், 5 டிரில்லியன் டாலர் பொருளாதார மதிப்புக் கொண்ட நாடாக மாற்ற இலக்கு நிர்ணயம் செய்து, பிரதமர் நரேந்திர மோடி செயல்பட்டு வருகிறார். இந்த இலக்கை, இந்தியா எட்டிவிடும். அதற்கேற்ப உட்கட்டமைப்பு திட்டங்களிலும், மத்திய அரசு தீவிர கவனம் செலுத்தி வருகிறது.

அடுத்த 5 ஆண்டுகளில், 102 லட்சம் கோடி ரூபாய் மதிப்பிலான உட்கட்டமைப்புத் திட்டங்களில் முதலீடு செய்யப்பட உள்ளது. அடுத்த சில மாதங்களில், உட்கட்டமைப்புத் திட்டங்களில், செய்யப்படும் முதலீட்டை ரூ. 300 லட்சம் கோடியாக உயர்த்த, இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

அதற்கு ஏற்றவகையில், 2020ஆம் ஆண்டின் மத்தியில், பன்னாட்டளவிலான முதலீட்டாளர் மாநாட்டை இந்தியா நடத்தும். கடந்த 6 ஆண்டுகளில், மத்திய, மாநில அரசுகள் பங்களிப்புடன், நாட்டில், 51 லட்சம் கோடி ரூபாய் மதிப்பீட்டில், உட்கட்டமைப்புத் திட்டங்களில் முதலீடு செய்யப்பட்டுள்ளது.

மின்ஆற்றல் உள்ளிட்ட எரிசக்தித்துறை, ரயில்வே, நகர்புறம், கல்வி, சுகாதாரம், டிஜிட்டல் தொழில்நுட்பம், நீர்பாசனம் மற்றும் மேலாண்மை திட்டங்கள் ஆகியனவற்றின் உட்கட்டமைப்புகளில் முதலீடு செய்வதில், மத்திய அரசு முதன்மை இலக்காக கொண்டுள்ளது என்று அவர் கூறினார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

51 + = 52