சவுதி அரேபிய இளவரசர் படுகொலையா? பரபரப்பு ஏற்படுத்தும் பகீர் வீடியோ!

சவுதி அரேபியாவின் பட்டத்து இளவரசர் படுகொலை செய்யப்பட்டார் என்ற தகவலுடன் சமூக வலைதளங்களில் பகிரப்படும் அதிர்ச்சி காட்சிகள் அடங்கிய வீடியோ, பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

வளைகுடா நாடான சவுதி அரேபியாவின் சவுதி பட்டத்து இளவரசன் முகமது பின் சல்மானை படுகொலை செய்யும் முயற்சியில், அவர் மீது துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்டதாகக்கூறி, சமூக வலைதளங்களில் வீடியோவுடன் தகவல் பகிரப்பட்டு வருகிறது.

அதில், அவர் காரில் இருந்து இறங்கி செல்ல முற்படும் படும் மர்ம நபர்கள் துப்பாக்கியால் சுடுவதும், குழப்பமான சூழலில் மெய்க்காப்பாளர்கள் இளவரசரை சூழ்ந்து பாதுகாப்பாக காரில் ஏற்றிச் சென்று அங்கிருந்து மின்னல் வேகத்தில் தப்புவதும் போன்ற காட்சிகள் இடம் பெற்றுள்ளன. இன்னும் சிலர், இளவரசர் கொல்லப்பட்டார் என்றே தகவலை பரப்பி வருகின்றனர்.

ஆனால், அவ்வாறு எதுவும் நிகழவில்லை; இது ஒரு ஒத்திகை நிகழ்ச்சிதான் என்று, வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. இதை நிரூபிப்பது போல், துப்பாக்கிச்சூடுசம்பவத்தை பலரும் அச்சமின்றி மொபைல்போனில் படம் பிடித்து கொண்டிருப்பதும், அந்த வீடியோவில் இடம் பெற்றுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

9 + 1 =