கனேரியாவிடம் பாகுபாடு: இன்சமாம் மறுப்பு

இஸ்லாமாபாத்; பாகிஸ்தான் அணி முன்னாள் சுழற்பந்து வீச்சாளர் டேனிஷ் கனேரியாவிடம் பாகுபாடு காட்டப்பட்டதாக கூறப்பட்ட குற்றச்சாட்டில் மவுனம் காத்து வந்த அந்த அணி முன்னாள் கேப்டன் இன்சமாம் உல் ஹக், அவ்வாறு எதுவும் நடக்கவில்லை என தெரிவித்துள்ளார்.

பாகிஸ்தான் அணியின் சுழற்பந்து வீச்சாளர் கனேரியா. இந்து மதத்தை சேர்ந்த இவர், 2012ல் இங்கிலாந்து கவுன்டி போட்டிகளில் ஸ்பாட் பிக்சிங்கில்’ சிக்கியதால், வாழ்நாள் தடை விதிக்கப்பட்டது. சமீபத்தில், இவர் இந்து என்பதால், பாகிஸ்தான் அணியில் பாகுபாடு காட்டப்பட்டதாக முன்னாள் வீரர் அக்தர் தெரிவித்தார். கனேரியா மேஜையில் இருந்த உணவை எடுத்த போது, கேப்டன் உள்ளிட்ட அனைவரும் வியப்புடன் பார்த்தனர். அப்போது, நான், கேப்டனிடம், நீங்கள் அணி கேப்டனாக இருக்கலாம். ஆனால்,உங்கள் நடவடிக்கை சரியில்லை. இவர் நிறைய விக்கெட் எடுத்து நமது அணிக்கு வெற்றி தேடி தந்துள்ளார். அவரை மோசமாக நடத்தக்கூடாது என தெரிவித்தேன் என்றார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

+ 30 = 31