கஜகஸ்தானில் விமான விபத்து! 8 பயணிகள் பலி; பலர் படுகாயம்

கஜகஸ்தான் நாட்டில், 100 பேருடன் சென்ற விமானம் விபத்துக்குள்ளானது. இதில் 8 பேர் உயிரிழந்தனர்.

கஜகஸ்தானில் அல்மேட்டி நகரில் இருந்து தலைநகர் நுர்சுல்தன் நகருக்கு பயணிகள் விமானம் ஒன்று புறப்பட்டது. பெக் ஏர்லைன்ஸ் நிறுவனத்துக்கு சொந்தமான இந்த விமானத்தில் 100 பயணிகள் இருந்தனர்.

புறப்பட்ட சில நிமிடங்களிலேயே அருகே இருந்த 2 மாடி கட்டிடத்தில் மோதி விபத்துக்குள்ளானது. விமானம் போதிய உயரத்தை எட்ட முடியாமல் கட்டிடம் மீது மோதியதாக கூறப்படுகிறது. மீட்புக்குழுவினர் நிகழ்விடத்தில் மீட்பு பணிகளை மேற்கொண்டனர்.

முதற்கட்ட தகவலின்படி 7 பேர் உயிரிழந்ததாக தெரிகிறது. மேலும் விமானத்திலிருந்த மற்றவர்களை மீட்கும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

+ 39 = 46