எல்லையில் வாலாட்டி வரும் பாகிஸ்தான்! இந்திய பதிலடியில் 2 பாக். வீரர்கள் பலி

காஷ்மீரின் உரி எல்லைப்பகுதியில், பாகிஸ்தான் ராணுவம் அத்துமீறி தாக்குதல் நடத்தியது. இதற்கு இந்திய ராணுவம் அளித்த பதிலடியில், இரண்டு பாகிஸ்தான் வீரர்கள் கொல்லப்பட்டனர்.

பாகிஸ்தான் ராணுவம் காஷ்மீர் பகுதியில் அவ்வப்போது தாக்குதல் நடத்தி வருவதை வழக்கமாக கொண்டுள்ளது. இந்திய ராணுவமும் இதற்கு தக்க பதிலடியும் கொடுத்து வருகிறது. எனினும் அடங்காத பாகிஸ்தான், அத்துமீறி வருகிறது.

இந்நிலையில், காஷ்மீரின் உரி செக்டார் எல்லை கட்டுப்பாட்டு கோடு பகுதியில் பாகிஸ்தான் ராணுவம் திடீரென இந்திய நிலைகள் மீது தாக்குதல் நடத்தியது. இதற்கு இந்திய ராணுவமும் தக்க பதிலடி கொடுத்தது. நீண்ட நேரம் நடந்த துப்பாக்கிச் சண்டையில், இந்திய ராணுவ அதிகாரி மற்றும் ஒரு பெண் ஆகியோர் உயிரிழந்தனர். மேலும், 2 பேர் காயம் அடைந்தனர்.

அதேபோல், பாகிஸ்தான் ராணுவ வீரர்கள் 2 பேர் கொல்லப்பட்டனர். இதை பாகிஸ்தான் ராணுவமும் ஒப்புக் கொண்டது. பாகிஸ்தான் தரப்பின் நடவடிக்கையால் எல்லையில் சற்று பதட்டமான சூழல் நிலவுகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

79 − 72 =