சூரியகிரகணம் பார்க்க முடியவில்லையே! டிவிட்டரில் பிரதமர் மோடி ஆதங்கம்

டெல்லியில் நிலவிய மேக மூட்டத்தால், தன்னால் முழு வளைய சூரிய கிரகணத்தை பார்க்க முடியவில்லை என்று பிரதமர் மோடி வருத்ததுடன், டிவிட்டரில் பதிவிட்டுள்ளார்.

வானில் அரிய நிகழ்வாக இன்று வளைய சூரிய கிரகணம் நிகழ்ந்துள்ளது. இதை பலரும் கண்டு ரசிக்க, பல்வேறு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன. பிரதமர் மோடியும் கிரகணத்தை காண ஆவலுடன் காத்திருந்தார். ஆனால், மேகமூட்டத்தால் அவரால் பார்க்க முடியவில்லை.

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில், மற்ற இந்தியர்களை போலவே முழு வளைய சூரிய கிரகணத்தை காண நான் ஆர்வமாக இருந்தேன். துரதிர்ஷ்டவசமாக காண முடியாமல் போய்விட்டது.

எனினும், கேரள மாநிலம் கோழிக்கோடு மற்றும் இந்தியாவின் மற்ற பகுதிகளில் தெரிந்த முழு வளைய சூரிய கிரகணத்தை தொலைக்காட்சிகளின் நேரடி ஒளிப்பரப்பின் மூலம் கண்டு ரசித்தேன் என்று பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். மேலும் நிபுணர்களுடன் கலந்துரையாடி இது குறித்த தனது அறிவை மேம்படுத்திக் கொண்டதாக, பிரதமர் ட்விட் பதிவில் கூறியுள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

11 − = 3