ஆளுநர் உரையுடன் தமிழக சட்டசபை கூட்டத்தொடர் ஜனவரி 6இல் தொடக்கம்

தமிழக சட்டசபை கூட்டம், வரும் ஜனவரி 6ஆம் தேதி கூடும் என்று சட்டசபை செயலாளர் அறிவித்துள்ளார்.

இது குறித்து சட்டசபை செயலாளர் சீனிவாசன் வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழக சட்டசபை கூட்டம் ஜனவரி 6ஆம் தேதி கூடுகிறது. 2020ஆம் ஆண்டின் முதல் கூட்டம் என்பதால் அன்று, ஆளுனர் பன்வாரிலால் புரோகித் உரையுடன், காலை 10 மணிக்கு சட்டசபை கூடுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

சட்டசபை கூட்டத்தொடரை எத்தனை நாள் நடத்துவது என்பது குறித்து வரும் 6-ஆம் தேதி நடைபெறும் அலுவல் ஆய்வு கூட்டத்தில் முடிவு எடுக்கப்படும் என்று தெரிகிறது.

குடியுரிமை மசோதா நிறைவேற அதிமுக ஆதரவு அளித்துள்ள நிலையில், இந்த விவகாரம் சட்டசபை கூட்டத்தொடரில் பெரும் அமளியை கிளப்பும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

18 − 14 =