50 ஆண்டுகளுக்குப்பின் சந்தித்து கொண்ட ஆசிரியர்களின் சந்திப்பு

விமல்

புதுக்கோட்டையில் 50 ஆண்டுகளுக்கு முன்பு பயிற்சி பெற்ற ஆசிரியர்கள் ஒரே இடத்தில் சந்தித்து கொண்டு தங்களின் அன்பை வெளிப்படுத்திக் கொண்டது பார்ப்பவர்களை பரவசத்தில் ஆழ்த்தியது. புதுக்கோட்டை எம்ஏ கிரேண்ட் ஹோட்டலில் அதன் உரிமையாளர் ஆர். மாரிமுத்து தலைமையில் 1967ம் ஆண்டு முதல் 1969ம் ஆண்டு வரை புதுக்கோட்டையில் அரசு ஆதாரப் பள்ளியில் ஆசிரியர் பயிற்சி பெற்ற முன்னாள் மாணவர்கள் சந்திப்பு சுமார் 7 மணி நேரத்திற்கும் மேலாக நடைப்பெற்றது. இன்று நடந்த இந்நிகழ்ச்சியை ஆசிரியர் பத்மனாபன் ஏற்பாடு செய்திருந்தார். சதாசிவம் வரவேற்புரையாற்றினார்.

இதில் 30 ஆசிரியர்களும் அவர்களுக்கு ஆசிரியராக இருந்தவர்களில் ஒருவரான ஆசிரியர் அண்ணாமலை சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு சிறப்பித்தார். அனைவருக்கும் நினைவுப் பரிசு வழங்கி கவுரவிக்கப்பட்டது. 50 ஆண்டுகளுக்கு முன்பு படித்து தலை சிறந்த மாணவர் சமுதாயத்தை உருவாக்கி 75 வயதுகளை கடந்த முன்னாள் மாணவர்கள் இன்னால் தாத்தாக்களின் சந்திப்பு புதுக்கோட்டையில் நடைபெற்றதை பார்த்தவர்கள் மட்டுமின்றி நிகழ்ச்சியில் கலந்து கொண்டவர்களும் தங்கள் அன்பினை பரிமாரிக் கொண்டது சிறந்த நட்பின் இலக்கணமாகவே கருதப்படுகிறது.விழாவிற்கான அனைத்து ஏற்பாடுகளையும் உடையப்பன், மருது, ஏஎல்.வேலு உள்ளிட்டோர் செய்திருந்தனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

95 − = 85