அதிமுக வேட்பாளர் திமுவிற்கு தாவல்! புதுக்கோட்டையில் பரபரப்பு

புதுக்கோட்டையில், உள்ளாட்சி தேர்தலில் அதிமுக சார்பில் வேட்புமனு தாக்கல் செய்தவர் திமுகவில் இணைந்த விவகாரம், பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

புதுக்கோட்டை மாவட்டம் மணல்மேல்குடியை சேர்ந்தவர் நாராயணன்; இவர், ஒன்றிய கவுன்சிலர் பதவிக்கு அதிமுக சார்பில் வேட்புமனு தாக்கல் செய்திருந்தார். இதற்கிடையே, அவர் நேற்று கடத்தப்பட்டதாக தகவல் பரவியது.

திமுகவினர் தான் கடத்தியதாக பரவிய தகவல், பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த விவகாரம் தொடர்பாக இரு தரப்பினர் இடையே மோதல் ஏற்பட்டது; இதில் எட்டுக்கும் மேற்பட்டோ காயமடைந்தனர்.

இந்த நிலையில், கடத்தப்பட்டதாக கூறப்பட்ட அதிமுக வேட்பாளர் நாராயணன், இன்று புதுக்கோட்டை வடக்கு மாவட்ட திமுக செயலாளர் ரகுபதி முன்னிலையில் திமுகவில் இணைந்தார்.

உள்ளாட்சி தேர்தல் பிரசாரம் சூடுபிடித்துள்ள நிலையில், அதிமுக வேட்பாளர் திமுகவிற்கு தாவி இருப்பது, புதுக்கோட்டை மாவட்டத்தில் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

1 COMMENT

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

28 − = 19