திமுக நடத்தும் பேரணியில் கலந்துக்க வாங்க! நடிகர் – நடிகைகளுக்கு ஸ்டாலின் அழைப்பு

குடியுரிமை சட்டத்திற்கு எதிராக வரும் 23ஆம் தேதி சென்னையில் திமுக நடத்தும் போராட்டத்தில் சினிமா நடிகர், நடிகர் கலந்து கொள்ள வேண்டும் என்று, மு.க. ஸ்டாலின் அழைப்பு விடுத்துள்ளார்.

குடியுரிமைத் திருத்தச் சட்டத்துக்கு எதிராக தி.மு.க சார்பில் டிசம்பர் 23ஆம் தேதி சென்னையில் கண்டனப்பேரணி நடக்கிறது. இதில், தி.மு.க கூட்டணி கட்சிகள் பங்கேற்க உள்ளன. அத்துடன் கமல்ஹாசனின் மக்கள் நீதி மய்யம் கட்சிக்கும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில், திமுக நடத்தும் பேரணியில் கலந்துகொள்ள நடிகர்கள் ரஜினி, அஜித், விஜய் உள்ளிட்டோர் உறுப்பினர்களாக இருக்கும் தென்னிந்திய நடிகர் சங்கத்திற்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் எழுதியுள்ள கடிதத்தில், பாஜக அரசைக் கண்டித்து இந்தியாவே போராடி வருகிறது. கட்சி எல்லைகளை கடந்து சாதி, மதம், மாநிலப் பாகுபாடுகள் கடந்து, இப்போராட்டத்தை முன்னெடுப்பதன் மூலமாக மட்டுமே இச்சட்டத்தை திரும்பப் பெற வைக்க முடியும்.

எனவே தாங்களும், தங்கள் அமைப்பும் இப்பேரணியிலும் அதைத் தொடர்ந்து நடக்க இருக்கும் போராட்டங்களிலும் பங்கெடுத்து தங்களது ஜனநாயகக் குரலை எழுப்புமாறு அழைப்பு விடுக்கிறேன்” என்று கூறியுள்ளார்.

இதேபோல், விவசாய அமைப்புகள், வணிகர் சங்கங்களும் இப்பேரணியில் கலந்து கொள்ளுமாறு திமுக சார்பில் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

64 + = 67