பாகிஸ்தான், வட இந்தியாவில் நில அதிர்வு! வீடுகள் அதிர்ந்ததால் மக்கள் பீதி

தலைநகர் டெல்லி உட்பட பல்வேறு வட மாநிலங்களில் திடீர் நில அதிர்வு ஏற்பட்டது. வீடுகளில் உள்ள பொருட்கள் குலுங்கியதால், மக்கள் பீதியடைந்தனர்.

ஆப்கானிஸ்தானின் இந்துகுஷ் மலை பகுதியில், பூமியின் மேற்பரப்பில் இருந்து 190 கி.மீ., ஆழத்தில் திடீரென நில நடுக்கம் ஏற்பட்டது. இது, ரிக்டர் அளவு கோலில் 6. 3 ஆக பதிவானது. அதன் தாக்கம் பாகிஸ்தான், வட இந்தியாவில் உணரப்பட்டது.

தலைநகர் டெல்லி உள்பட வட மாநிலங்களில் நில அதிர்வு ஏற்பட்டது. வீடுகளில் இருந்த பொருட்கள் குலுங்கியதால் மக்கள் பீதியில் உறைந்தனர்; திறந்தவெளி பகுதிக்கு விரைந்தனர். டெல்லி, சண்டிகார், மதுரா ஆகிய நகரங்களில் நில அதிர்வு உணரப்பட்டது. எனினும் எந்த பாதிப்பும் ஏற்பட்டதாக தகவல் இல்லை.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

− 1 = 6