முதல்வர் பழனிச்சாமி டெல்லி பயணம்! இன்று மாலை பிரதமரை சந்திக்கிறார்

டெல்லி சென்றுள்ள முதல்வர் எடப்பாடி பழனிசாமி, இன்று மாலை பிரதமர் மோடி, உள்துறை அமைச்சர் அமித்ஷா ஆகியோரை சந்தித்துப் பேசுகிறார்.

டெல்லியில் இன்று மாலை, மகாத்மா காந்தியின் 150ஆவது பிறந்தநாள் கொண்டாட்டம் குறித்த மாநாடு, குடியரசுத்தலைவர் ராம்நாத் கோவிந்த் தலைமையில் நடைபெறுகிறது. குடியரசுத்தலைவர் மாளிகையில் நடைபெறும் இந்நிகழ்ச்சியில் பிரதமர் மோடி, மத்திய அமைச்சர்கள், பல்வேறு மாநிலங்களின் முதல்வர்கள் பங்கேற்கவுள்ளனர்.

இந்த மாநாட்டில் பங்கேற்பதற்காக, முதல்வர் எடப்பாடி பழனிசாமி இன்று காலை சென்னையில் இருந்து டெல்லிக்கு விமானத்தில் புறப்பட்டுச் சென்றார். மாலையில், பிரதமர் மோடியை தமிழக முதல்வர் சந்திக்கிறார்.

அப்போது, ஜிஎஸ்டி மூலம் தமிழகத்துக்கு மத்திய அரசு தர வேண்டிய நிதியை உடனடியாக விடுவிக்க கோருவது, ஜெயலலிதா நினைவிடத்தை திறந்து வைக்க அழைப்பு விடுப்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை முன்வைப்பார் என்று தெரிகிறது. அதேபோல், உள்துறை அமைச்சர் அமித் ஷாவையும் முதல்வர் சந்திக்க உள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

48 + = 51