வாக்கிங்… ஷவர் குளியல்… விதவிதமான ஊட்ட உணவு..! புத்துணர்வு முகாமில் யானைகள் குஷி!!

சதீஷ் குமார், கோவை செய்தியாளர்

கோவை மேட்டுப்பாளையத்தில் தொடங்கியுள்ள சிறப்பு புத்துணர்வு முகாமில், ஷவர் குளியல், தினமும் வாக்கிங், ஊட்ட உணவு போன்றவை தரப்படுவதால், யானைகள் உற்சாகத்துடன் வலம் வருகின்றன.

தமிழக இந்து சமய அறநிலையத்துறை சார்பில் கோவில் மற்றும் மடங்களை சேர்ந்த யானைகளுக்கான 12வது சிறப்பு புத்துணர்வு நலவாழ்வு முகாம், கோவை மேட்டுப்பாளையம் பவானி ஆற்றின் கரையோரம் உள்ள தேக்கம்பட்டியில் நேற்று தொடங்கியது.

இந்த முகாமை இந்து சமய அறநிலையத்துறை ஆணையர் பணீந்திர ரெட்டி ரீப்பன் வெட்டியும், யானைகளுக்கு பழங்களை கொடுத்தும் துவக்கி வைத்தார். இம்முகாமில், தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இருந்து கோவில் மற்றும் திருமடங்களை சேர்ந்த 28 யானைகள் இதில் பங்கேற்றுள்ளன.

மொத்தம் 48 நாட்கள் நடைபெறும் இம்முகாமில், யானைகளுக்கு முழு ஓய்வுடன் வாக்கிங், ஷவர் குளியல், ஆயுர்வேத சிகிச்சை உள்ளிட்டவை தரப்படுகிறது. உணவாக பசுந்தீவனங்கள் பாசிப்பயிறு கொள்ளு அரிசி போன்ற தானியங்களில் தயாரிக்கப்பட்ட ஊட்டச்சத்து உணவுகள் வழங்கப்பட உள்ளது.

கடந்த முகாமில் சந்தித்துக் கொண்ட யானைகள் மீண்டும் தற்போது ஒன்றுடன் ஒன்று கொஞ்சி விளையாடி, குஷியோடு உலவி வருகின்றன. யானைகள் அடிக்கும் லூட்டிகள், பார்வையாளர்களை மிகவும் கவர்ந்து வருகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

75 − 66 =