கங்கை நதி தூய்மைக்கான தேசிய கவுன்சில் கூட்டத்தில் பிரதமர் நரேந்திர மோடி பங்கேற்பு

உத்திரப்பிரதேசத்தில் நடைபெற்ற கங்கை நதியை தூய்மைப்படுத்துவதற்காக அமைக்கப்பட்ட தேசிய கவுன்சிலின் முதல் கூட்டத்தில், பிரதமர் மோடி கலந்து கொண்டார்.

இதற்காக உத்திரப்பிரதேச மாநிலம் கான்பூர் சென்றடைந்த பிரதமரை, விமான நிலையத்தில் உத்தரபிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் உள்ளிட்டோர் வரவேற்றனர். அதை தொடர்ந்து சந்திரசேகர் ஆசாத் வேளாண் மற்றும் தொழில்நுட்ப பல்கலைகழகத்தில் நடந்த கூட்டத்தில் பிரதமர் மோடி பங்கேற்றார்.

பிரதமருடன் மத்திய நீர்வளத்துறை அமைச்சர் கஜேந்திர சிங் ஷெகாவத், உத்தர பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத், உத்தரகாண்ட் முதல்வர் திரிவேந்திர சிங் ராவத், பீகார் துணை முதல்வர் சுஷில் மோடி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

இக்கூட்டத்தில், கங்கை நதியை தூய்மைபடுத்துவதற்காக கொண்டுவரப்பட்ட நமாமி கங்கா திட்டத்தின் முன்னேற்றங்கள் குறித்து விவாதிக்கப்பட்டது. கங்கை நதியை புனரமைப்பது, பாதுகாப்பது மற்றும் மேலாண்மை செய்வது ஆகியவை பற்றி விவாதிக்கப்பட்டது.

முன்னதாக, இக்கூட்டத்தில் கலந்து கொள்ள சென்ற பிரதமர் மோடி, அதற்காக அடல் காட் பகுதியில் கங்கை ஆற்றில் படகு ஒன்றில் பயணம் மேற்கொண்டார். அவருடன் உத்தர பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத், பீகார் துணை முதல்வர் சுஷில் மோடி உள்ளிட்டோரும் சென்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

+ 8 = 18