உள்ளாட்சி தேர்தலில் நல்லாட்சி அமைப்போம்! திமுக தொண்டர்களுக்கு ஸ்டாலின் கடிதம்

நாடாளுமன்றத் தேர்தல் களத்தின் இனிப்பான வெற்றிப்பரிசும், இடைத்தேர்தல் களம் தந்துள்ள கசப்பான பாடமும் மறக்க முடியாதவை என மு.க. ஸ்டாலின் தொண்டர்களுக்கு எழுதியுள்ள கடிதத்தில் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக, தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் தொண்டர்களுக்கு எழுதியுள்ள கடிதத்தில் கூறியிருப்பதாவது:

எப்படியாவது உள்ளாட்சித் தேர்தலை நடத்தாமல் தப்பித்துவிடலாமா, அந்தப் பழியைத் தூக்கி எதிர்க்கட்சியான தி.மு.க. மீது போட்டுவிடலாமா என 2016-ஆம் ஆண்டிம் இருந்தே முறையான இடஒதுக்கீட்டையும், தொகுதி வரையறையையும் செய்யாமல் , உயர்நீதிமன்றம் மற்றும் உச்சநீதிமன்றத்திடம் குட்டுப்பட்டுக் கொண்டே இருந்தது அ.தி.மு.க. அரசு.

மக்களை நேரடியாக சந்திக்கும் திராணி இல்லாததால், உள்ளாட்சித் தேர்தலை தள்ளிப் போட்டுக் கொண்டே வந்தனர். அதற்கு தி.மு.க. மீது பழியைச் சுமத்தினர். ஜனநாயக ரீதியிலான தேர்தல் களத்தில், தி.மு.க. என்றைக்குமே மக்களைச் சந்திக்கத் தவறியதுமில்லை, தயங்கியதுமில்லை. தேர்தலை நாடி எதிர்கொள்கின்ற உண்மையான ஜனநாயக இயக்கம் திமுக.

தமிழ்நாட்டில் உள்ள மாநிலத் தேர்தல் ஆணையம் தனது சுதந்திரத்தையும், அதிகாரத்தையும் முழுமையாக அ.தி.மு.க. அரசிடம் ‘சரணாகதி’ அடைந்துவிட்டது. நாடாளுமன்றத் தேர்தல் களத்தின் இனிப்பான வெற்றிப் பரிசும், இடைத்தேர்தல் களம் தந்துள்ள கசப்பான பாடமும் மறக்க முடியாதவை; மறக்கக் கூடாதவை.

விரைவில் தமிழ்நாட்டில் அவர்களுக்கான நல்லாட்சி அமையப் போகிறது என்ற நம்பிக்கை மக்களுக்கு ஏற்படும். நாம் மக்கள் பக்கம் நிற்போம்; எல்லா இடங்களிலும் வெற்றிக் களம் காண்போம் என்று எழுதியுள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

+ 4 = 10