உள்ளாட்சி தேர்தலில் போட்டியிடுவோர் சொத்து விவரம் தாக்கல் செய்வது கட்டாயம்

தமிழக உள்ளாட்சி தேர்தலில் போட்டியிடுவோர், தங்களது வேட்புமனுவுடன், சொத்து பட்டியலையும் தாக்கல் செய்ய வேண்டும் என்று மாநில தேர்தல் ஆணையம் உத்தரவிட்டு உள்ளது.

உள்ளாட்சி தேர்தலுக்கான வாக்குப்பதிவு வரும் 27 மற்றும் 30ஆம் தேதிகளில் நடைபெற உள்ளது. கடந்த 9ஆம் தேதி தொடங்கிய வேட்புமனு தாக்கல், வரும் 16இல் நிறைவு பெறுகிறது. தற்போது வேட்புமனு தாக்கல் மந்தகதியில் இருந்தாலும், இன்று முதல் சூடுபிடிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த நிலையில், சட்டசபை மற்றும் நாடாளுமன்ற தேர்தல் நடைமுறையில் இருப்பது போலவே, உள்ளாட்சி தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களும் வேட்புமனுவுடன், தங்களது பெயரிலும், குடும்பத்தினர் பெயரிலும் உள்ள சொத்து விவரங்கள் குறித்த பட்டியலை தாக்கல் செய்ய வேண்டும் என்று மாநில தேர்தல் ஆணையம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

அதன்படி, வேட்பாளர்கள் தங்கள் பெயரிலும், தங்கள் குடும்பத்தினர் பெயர்களிலும் உள்ள அசையும் மற்றும் அசையா சொத்து விவரங்களை வேட்புமனுவுடன் தாக்கல் செய்ய வேண்டும்.

வேட்பாளர்கள் தங்கள் மீது உள்ள வழக்குகள் மற்றும் தண்டனை விவரங்களை தெரிவிக்கும் வகையில் 3-ஏ என்ற உறுதிமொழி படிவத்தையும் இணைத்து வழங்க வேண்டும். இல்லாவிட்டால் மனு நிராகரிப்பட்டும்.

கட்சி அடிப்படையில் தேர்தல் நடக்கும் மாவட்ட பஞ்சாயத்து வார்டு, ஒன்றிய வார்டுகள் மட்டுமின்றி கிராம பஞ்சாயத்து தலைவர் பதவிக்கு போட்டியிடுபவர்களும் வேட்புமனுவுடன் கண்டிப்பாக சொத்து விவர பட்டியலை தாக்கல் செய்ய வேண்டும். அதில் நோட்டரி பப்ளிக் உள்ளிட்ட தகுதியானவர்கள் முன்னிலையில் உறுதிமொழி அளிக்கப்பட்ட பத்திரங்களை வேட்புமனுவுடன் இணைக்க வேண்டும்.

மாநில தேர்தல் ஆணையத்தின் இந்த உத்தரவு, அரசியல் கட்சியினர் மத்தியில் அதிர்வலையை ஏற்படுத்தி இருக்கிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

86 − 82 =