உள்ளாட்சி தேர்தலில் எந்தெந்த மாநகராட்சி யார்யாருக்கு ஒதுக்கீடு? அரசிதழில் வெளியீடு

தமிழகத்தில் உள்ள 15 மாநகராட்சிகளில் 8 மேயர் பதவிகள் மகளிருக்கு ஒதுக்கப்பட்டுள்ளது. இது தொடர்பான ஒதுக்கீடு அரசிதழில் வெளியிடப்பட்டுள்ளது.

அதன்படி, மொத்தம் உள்ள 15 மாநகராட்சி மேயர் பதவிகளில் 9 பதவிகளுக்கு இட ஒதுக்கீடு முறை பின்பற்றப்படும் என்று கூறப்பட்டுள்ளது. திருச்சி, திருநெல்வேலி,நாகர்கோவில், திண்டுக்கல், மதுரை, கோவை ,ஈரோடு ஆகிய மாநகராட்சி மேயர் பதவிகள் மகளிருக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

சென்னை, சேலம், திருப்பூர், தஞ்சாவூர், ஓசூர், ஆவடி ஆகியன பொதுவானவை. வேலூர் மற்றும் தூத்துக்குடி மாநகராட்சி மேயர் பதவி, பட்டியலினத்தைச் சேர்ந்த பெண்களுக்கு ஒதுக்கப்படும் என்று அரசிதழில் வெளியிடப்பட்ட அறிவிக்கை தெரிவிக்கிறது.

இதற்கிடையே, அறிவிக்கப்பட்ட தேதியில் உள்ளாட்சி தேர்தல் நடைபெறும் என்று மாநிலத் தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

37 + = 41