மீண்டும் நீதிமன்றம் செல்ல திமுக முடிவு! திட்டமிட்டபடி உள்ளாட்சி தேர்தல் நடைபெறுமா?

உள்ளாட்சி தேர்தல் அறிவிப்பு தொடர்பாக மீண்டும் நீதிமன்றத்தை நாட திமுக முடிவு செய்துள்ளதாக, அதன் தலைவர் மு.க.ஸ்டாலின் அறிக்கையில் தெரிவித்துள்ளார். இதனால், திட்டமிட்டபடி உள்ளாட்சி தேர்தல் நடைபெறுமா என்ற சந்தேகம் மீண்டும் ஏற்பட்டுள்ளது.

உச்சநீதிமன்ற உத்தரவுகளைப் புறக்கணிக்கும் வகையில் தேர்தல் அறிவிப்பு வெளியிட்டது கண்டனத்திற்குரியது என்ற அவர், உள்ளாட்சித் தேர்தலில் மீண்டும் நீதிமன்றத்தை நாடுவதைத் தவிர வேறு வழி இல்லை என்று கூறியிருக்கிறார்.

உள்ளாட்சி தேர்தல் தேதியை அறிவிக்கும் முன் அனைத்துக்கட்சி கூட்டத்தை மாநில தேர்தல் ஆணையம் கூட்டாதது ஏன் என்று ஸ்டாலின் கேள்வி எழுப்பியுள்ளார்.

சென்னையில் கோயம்பேட்டில் உள்ள மாநில தேர்தல் ஆணையத்தில் இன்று மாலை செய்தியாளர்களை சந்தித்த தேர்தல் ஆணையர் பழனிசாமி, ஊரக உள்ளாட்சிகளில் தேர்தல் நடத்துவதற்கான அறிவிப்பை வெளியிட்டார்.

உச்சநீதிமன்ற தீர்ப்பின்படி திருநெல்வேலி, தென்காசி உள்பட 9 மாவட்டங்கள் மற்றும் சென்னை தவிர்த்து 27 மாவட்டங்களில் வரும் 27 மற்றும் 30 தேதிகளில் தேர்தல் நடைபெறும் என்றார்.

தற்போது மீண்டும் நீதிமன்றத்தை நாடப்போவதாக திமுக அறிவித்திருப்பதால், உள்ளாட்சி தேர்தல் திட்டமிட்டபடி நடைபெறுமா என்ற சந்தேகம் எழுந்துள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

+ 10 = 12