உள்ளாட்சி தேர்தல் : வரும் 8ம் தேதி திமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம்

உள்ளாட்சி தேர்தல் தொடர்பாக ஆலோசனை நடத்த, திமுக மாவட்ட செயலாளர்கள், எம்.பி- எம்.எல்.ஏ.க்கள் கூட்டம், வரும் 8ம் தேதி சென்னையில் நடைபெறும் என, அக்கட்சி பொதுச்செயலாளர் அன்பழகன் அறிவித்துள்ளார்.

இது தொடர்பாக, திமுக பொதுச்செயலாளர் அன்பழகன் இன்று வெளியிட்டுள்ள அறிவிப்பில், உள்ளாட்சி தேர்தல் தொடர்பாக ஆலோசிப்பதற்காக, வரும் 8ம் தேதி ஞாயிற்றுக்கிழமை மாலை 5 மணியளவில் திமுக ஆலோசனை கூட்டம் நடைபெறும்.

சென்னை தியாகராயநகரில் உள்ள தனியார் நட்சத்திர விடுதியில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையில் இந்த கூட்டம் நடைபெறும் என அந்த அறிவிப்பில் அன்பழகன் தெரிவித்துள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

1 + 7 =