இது இப்படித்தான்

இது இப்படித்தான்

அடிபடும்
கற்களுக்குத்தான்
அபிசேகங்கள்
காத்திருக்கும்

கடினமான
பயணங்கள்
பெரும்பாலும்
கவலையைத்தீர்க்கும்
முடிவில்
கனிவைத்தரும்

பிரச்சனைகளை
தீர்ப்பதே மேல்
விட்டு விலகிசெல்லும்போது
தீர்ப்புகள்
தாமதமாகலாம்

அடுத்தவர்களுக்கு
துன்பம் செய்யும்பொழுது
அவரவர் இன்பத்தை
இழக்க நேரிடுகிறது

தேவைக்குமேல்
சேமிக்கும்போது
நிம்மதியை
செலவு செய்ய
வேண்டியிருக்கும்

எதிர்காலம்
என்பது
இன்பம்,துன்பம்
என்ற இருவழிப் பாதை
எதி்ல் பயணிப்பது என்பது
நாம் தேர்ந்தெடுப்பது

நன்மை செய்து
வாழ்ந்தால்
நலமான வாழ்க்கை
நம்மைத்தேடி வரும்

எண்ணங்கள்
சரியாக இருந்தால்
வண்ணங்கள்
வாழ்க்கையாகும்!

மரு.மு.பெரியசாமி

   புதுக்கோட்டை

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

71 − 63 =