பிரபல நிறுவன பெண்கள் கழிவறையில் ரகசிய கேமரா! ஐ.டி. ரெய்டில் சிக்கியது உடைமாற்றும் அந்தரங்க வீடியோ

சென்னையில் உள்ள பிரபல தனியார் நிறுவனம் ஒன்றில் நடந்த வருமான வரி சோதனையில் அங்கு பெண்களின் கழிவறையில் ரகசிய கேமிரா பொருத்தப்பட்டிருந்த அதிர்ச்சியான தகவல் தெரியவந்துள்ளது.

சென்னை அடையாறில் இறால் ஏற்றுமதி செய்யும் தனியார் நிறுவனம் ஒன்று செயல்பட்டு வருகிறது. வரி ஏய்ப்பு புகார் தொடர்பாக கடந்த 28ஆம் தேதி அங்கு வருமான வரித்துறை அதிகாரிகள் திடீர் சோதனை நடத்தினர்.

மேலும், ஊழியர்களின் வீடுகளிலும் சோதனையிட்ட அதிகாரிகள் அவர்களின் லேப்டாப் மற்றும் ஹார்ட் டிஸ்க்குகளை கைப்பற்றி ஆய்வு மேற்கொண்டனர். மூன்றாவது நாள் விசாரணையின் போது, அந்த நிறுவனத்தின் ஊழியர் செந்தில்குமார், அலுவலகத்திலேயே தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.

இது குறித்த விசாரணையில் செந்தில்குமாரின் வீட்டில் இருந்து கைப்பற்றப்பட்ட லாப்டாப்பில், கழிவறையில் பொருத்தப்பட்ட கேமராவில் பதினான, பெண்கள் உடைமாற்றும் வீடியோக்கள் இருந்துள்ளன.

அலுவலகத்தில் இருக்கும் பெண்கள், கழிவறையில் ரகசிய கேமராக்கள் வைத்து அந்தரங்கத்தை படம்பிடித்து இருப்பது விசாரணையில் தெரியவந்துள்ளது. செந்தில்குமார் தான் கழிவறையில் ரகசிய கேமிராவை பொருத்தினாரா? அந்தரங்க வீடியோக்கள் அவருக்கு வந்தது எப்படி? இதற்கு பின்னணியில் வேறு யாரெல்லாம் இருக்கிறார்களா? என்று பல்வேறு கோணங்களில் போலீசார் விசாரிக்கின்றனர்.

பிரபல இறால் ஏற்றுமதி நிறுவனத்தில், பெண்களின் கழிவறையில் ரகசிய கேமரா பொருத்தி இருக்கும் சம்பவம், அதிர்ச்சியை ஏற்பட்டுத்தி இருக்கிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

− 3 = 4