மண்புழு போல் ஊர்ந்து சென்று முதல்வராக மாட்டேன் – மு.க.ஸ்டாலின்

நான் மண்புழு போன்று ஊர்ந்து சென்று முதல்வராக மாட்டேன். நான் கருணாநிதியின் மகன் என்று திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கூறி உள்ளார்.

புதுக்கோட்டையில் இன்று தி.மு.க. எம்.எல்.ஏ., பெரியண்ணன்அரசு மகள் டாக்டர்.அபிநயா மணமகன் டாக்டர்.மு.பிரபு ஆகியோரின் திருமணத்தை தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் கலந்துகொண்டு நடத்தி வைத்து மணமக்களை வாழ்த்தி பேசினார். அப்போது அவர் கூறியதாவது:-

பாராளுமன்ற தேர்தலில் பொய்களை கூறி தி.மு.க. வெற்றி பெற்றதாக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி கூறி வருகிறார். அப்படியென்றால் இடைத்தேர்தலில் அ.தி.மு.க. பொய் கூறி வெற்றி பெற்றதாக அவரால் கூற முடியுமா? உள்ளாட்சி தேர்தலை யாராவது நிறுத்தி விட மாட்டார்களா? என்று அ.தி.மு.க. நினைத்து வருகிறது. முறையாக உள்ளாட்சி தேர்தல் நடத்தப்பட வேண்டும் என்று தி.மு.க. நினைக்கிறது.

1989-ல் நானும் ஸ்டாலினும் எம்.எல்.ஏ. ஆனோம். ஆனால் நான் முதல்வராகிவிட்டேன் என்று எடப்பாடி பழனிச்சாமி கூறி வருகிறார். நான் மண்புழு போன்று ஊர்ந்து சென்று முதல்வராக மாட்டேன். நான் கருணாநிதியின் மகன். தன் மானத்தை இழக்க மாட்டேன். மானம் கெட்ட பதவி எனக்கு தேவையில்லை.

உள்ளாட்சி தேர்தலை மனதில் வைத்து பொங்கல் பரிசு தொகுப்பை முன் கூட்டியே வழங்கி வருகிறது அ.தி.மு.க. அரசு. மிசாவில் நான் இத்தனை நாள் சிறையில் இருந்தேன் என்று நானே சொல்வதற்கு எனக்கு வெட்கமாக உள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.

விழாவில் திருநாவுக்கரசர் எம்.பி. பேசுகையில், தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின், முதல்-அமைச்சர் ஆக வேண்டும். அதற்காக அனைவரும் உழைக்க வேண்டும். பா.ஜ.க. மாநில துணைத்தலைவர் பி.டி.அரசகுமார், மு.க.ஸ்டாலின் விரைவில் அரியணை ஏறுவார் என்று பேசியிருக்கிறார். இதில் அவர் அரசியல் சார்பற்று மனதில் உள்ளதை வெளிப்படையாக பேசியுள்ளார் என்றார்.

விழாவில் முன்னாள் அமைச்சர்கள் கே.என்.நேரு, ரகுபதி, எ.வ வேலு, பெரியகருப்பண், சட்டமன்ற உறுப்பினர்கள் மெய்யநாதன், சந்திரசேகரன் உள்ளிட்ட ஏராளமானோரும் புதுக்கோட்டை மாவட்ட மருத்துவரணி துணை அமைப்பாளர் முத்துக்கருப்பண், ஒன்றிய செயலாளர் ராமகிருஷ்ணன், வடக்கு மாவட்ட பொருளாளர் ஆ.செந்தில், மாவட்ட பிரதிநிதி புதுநகர் குமார், பொறியாளரணி கமலக்கண்ணன், முக்கிய நிர்வாகிகள் மதியழகன், தினகரன் அரசு, முருகப்பன், சரவணன், மரியநாதன், சேக் அப்துல்லா, அம்மையாப்பட்டி வெற்றி, பால்ராஜ், மேற்குடிப்பட்டி முருகேசன், பாலா, திருமயம் ஒன்றிய நிர்வாகிகள் பி.எல்.சண்முகம், இராம. பழனியப்பன், ஆனந்தகுமார் உள்ளிட்ட அக்கட்சியின் அனைத்து பிரிவு நிர்வாகிகளும் கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்தினர். 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

16 − = 8