மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட புதுவை முதல்வர் நாராயணசாமி தேறி வருகிறார்

சென்னையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, அறுவை சிகிச்சை செய்யப்பட்ட புதுச்சேரி முதல்வர் நாராணயசாமியின் உடல்நிலை முன்னேறி வருகிறது. அவரை சந்திக்க யாரும் வர வேண்டாமென்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

கால்வலியால் அவதிப்பட்டு வந்த புதுச்சேரி முதல்வர் நாராயணசாமி, கடந்த 25ஆம் தேதி இரவு, சென்னை வடபழனி சிம்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அடுத்த நாள், அவருக்கு முழங்கால் மூட்டில் அறுவை சிகிச்சை செய்யப்பட்டது.

இதை தொடர்ந்து மருத்துவமனையில் தற்போது தங்கியுள்ளார். அவரது உடல்நிலை சீராக உள்ளது. மேலும், மருத்துவமனையில் இருந்தபடியே அலுவலக கோப்புகளை பார்வையிட்டு, முதல்வர் நாராயணசாமி கையெழுத்திட்டு வருகிறார்.

இந்த நிலையில் புதுச்சேரி முதல்வர் அலுவலகம் வெளியிட்டுள்ள அறிவிப்பில், முதல்வர் நாராயணசாமியின் உடல்நிலை சீராக உள்ளது. அவர். ஓரிரு தினங்களில் மருத்துவமனையில் இருந்து வீடு திரும்புவார்.

தற்போது அவருக்கு பூரண ஓய்வு தேவைப்படுகிறது. அத்துடன் விரைவில் அவர் வீடு திரும்ப உள்ளதால், அவரைக் காண யாரும் சென்னை மருத்துவமனைக்கு வர வேண்டாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

+ 50 = 52