எங்களிடம் 162 எம்.எல்.ஏ.க்கள் உள்ளனர் – சிவசேனாவின் சஞ்சய் ராவத் தகவல்

மகாராஷ்டிராவில் அரசு அமைக்கும் அளவுக்கு எங்களிடம் 162 எம்.எல்.ஏ.க்கள் உள்ளனர் என்று, சிவசேனா மூத்த தலைவர் சஞ்சய் ராவத் தெரிவித்தார்.

மகாராஷ்டிராவில் சிவசேனா, தேசியவாத காங்கிரஸ், காங்கிரஸ் கட்சிகள் இணைந்து கூட்டணி அரசு அமைக்கும் முயற்சியில் ஈடுபட்டு வந்த நிலையில், திடீர் திருப்பமாக பாஜகவின் தேவேந்திர பட்னாவிஸ் முதல்வராகவும், தேசியவாத காங்கிரஸ் கட்சியின் அஜித் பவார் துணை முதல்வராகவும் பதவி ஏற்றனர்.

இதை எதிர்த்து, சிவசேனா, தேசியவாத காங்கிரஸ், காங்கிரஸ் கட்சிகள் சார்பில் உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது. இந்த வழக்கில் உச்ச நீதிமன்றம் செவ்வாய் கிழமை காலை தீர்ப்பளிக்க உள்ளது.

இந்த நிலையில், தங்களுக்கு ஆதரவு அளிக்கும் எம்.எல்.ஏக்கள் கடிதத்தை ஆளுநர் மாளிகையில் 3 கட்சிகளின் மூத்த தலைவர்களும் அளித்துள்ளதாக கூறப்படுகிறது. அதன்படி, சிவசேனா 63, காங்கிரஸ் 44, தேசியவாத காங்கிரஸ் 51 என மொத்தம் 162 எம்.எல்.ஏக்கள் அதில் கையெழுத்திட்டு இருப்பதாக கூறப்படுகிறது.

மேலும், தங்களுக்கு போதிய பலம் இருப்பதை ஆளுநருக்கு தெரிவிக்கும் வகையில் இந்த எம்.எல்.ஏக்களை கொண்டு அணிவகுப்பு நடத்தவும் திட்டமிட்டுள்ளனர்.

சிவசேனா மூத்த தலைவர் சஞ்சய் ராவத் கூறுகையில், சிவசேனா, தேசியவாத காங்கிரஸ் காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் 162 பேர், பேரணியாக மும்பையில் உள்ள கிராண்ட் ஹையாட்டில் ஓட்டலில் அணிவகுக்கிறோம் என்றார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

2 + 2 =