நான் சொல்லித்தான் ஓ.பி.எஸ். தியானம் செய்தார்- துக்ளக் ஆசிரியர் குருமூர்த்தி பரபரப்பு பேச்சு

எனது அறிவுறுத்தலின் படியே துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், ஜெயலலிதா நினைவிடத்தில் தியானம் செய்தார் என்று, பரபரப்பான தகவலை, துக்ளக் இதழின் ஆசிரியர் குருமூர்த்தி தெரிவித்துள்ளார்.

துக்ளக் வார இதழின் பொன்விழா சிறப்புக் கூட்டம், திருச்சியில் நேற்று நடைபெற்றது. இதில், அந்த பத்திரிகையின் ஆசிரியர் குருமூர்த்தி பேசியதாவது:

இரண்டாக பிரிந்த அதிமுகவை இணைத்ததில் எனக்கு பங்கு உள்ளது. எனது அறிவுறுத்தலின் படியே மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் நினைவிடத்தில் துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் தியானத்தில் அமர்ந்தார்.

அதன் பிறகு தான் கட்சியில் இணைப்பு ஏற்பட்டது. அதிமுக ஆட்சியை கவிழ்த்தால் திமுக ஆட்சி பொறுப்புக்கு வந்துவிடும் என்று நான் பயந்தேன். அதிமுக அரசை கலைத்துவிட்டு ஆளுநர் ஆட்சியை கொண்டு வந்தாலும், தமிழகத்தில் மாற்றம் ஏற்படாது.

தமிழகத்தில், ரஜினி அரசியலுக்கு வந்தால் தான் மாற்றம் வரும். அரசியலுக்கு ரஜினிகாந்த் வருவது மிகவும் அவசியம். தமிழகத்தின் முன்னேற்றத்தைத் தடுக்கும் மிகப்பெரிய சக்தி திமுகதான்.

மகாராஷ்டிரா அரசியலில் நடப்பது இறுதிக்கட்டம் அல்ல. சரத்பவார் என்ன நினைக்கிறார் என்று சிவசேனா கட்சிக்கு கூட தெரியாது. எம்.எல்.ஏ.க்களை விலைக்கு வாங்கி, பாஜக ஆட்சி அமைத்தால் அதை ஏற்றுக்கொள்ள முடியாது.

ஆனால், சிவசேனா-தேசியவாத காங்கிரஸ் கூட்டணி அமைந்தால் நாட்டிற்கு பாதிப்பு ஏற்படும் என்பதால், இந்த விவகாரத்தில் நன பாரதிய ஜனதாவை ஆதரிக்கிறேன் என்று குருமூர்த்தி பேசினார்.

இவ்விழாவில், தமிழருமணியன் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

45 − = 37