மேற்கு இந்தியத்தீவுகள் எதிராக விளையாடும் இந்திய கிரிக்கெட் அணி அறிவிப்பு

மேற்கு இந்திய தீவுகள் அணிக்கு எதிரான 20 ஓவர் போட்டித் தொடர் மற்றும் ஒருநாள் போட்டித் தொடருக்கான இந்திய கிரிக்கெட் அணி அறிவிக்கப்பட்டுள்ளது.

வங்கதேசத்துக்கு எதிரான டெஸ்ட் தொடரில் விளையாடி வரும் இந்திய கிரிக்கெட் அணி அடுத்து மேற்கு இந்தியத்தீவுகள் அணிக்கு எதிராக மூன்று 20 ஓவர் மற்றும் 3 ஒருநாள் போட்டிகளில் விளையாடுகிறது.

முதலாவது 20 ஓவர் கிரிக்கெட் போட்டி, மும்பையில் டிசம்பர் 6ஆம் தேதியும்; 2வது போட்டி திருவனந்தபுரத்தில் 8ஆம் தேதியும், 3வது மற்றும் கடைசி போட்டி ஐதராபாத்தில் 11ஆம் தேதியும் நடக்கிறது.

அதேபோல், முதலாவது ஒருநாள் போட்டி சென்னையில் டிசம்பர் 15ஆம் தேதியும், 2வது போட்டி விசாகப்பட்டினத்தில் 18ஆம் தேதியும், 3வது மற்றும் கடைசி ஒருநாள் போட்டி கட்டாக்கில் 22ஆம் தேதியும் நடக்கிறது.

மேற்கு இந்தியத் தீவுகள் தொடருக்கான இந்திய அணியை, எம்.எஸ்.கே.பிரசாத் தலைமையிலான தேர்வு குழுவினர் கொல்கத்தாவில் அறிவித்தனர்.

இதில் 20 ஓவர் போட்டித் தொடருக்கான அணியில் முகம்மது சமி, புவனேசுவர் குமார் மீண்டும் சேர்க்கப்பட்டுள்ளனர். வங்கதேச தொடரில் அறிமுகமான சிவம் துபேக்கு, ஒருநாள் போட்டி அணியில் வாய்ப்பளிக்கப்பட்டுள்ளது. இதேபோல் தீபக் சாகரும், ஓராண்டுக்கு பிறகு ஒருநாள் போட்டிக்கான அணியில் சேர்க்கப்பட்டுள்ளார்.

டி20 அணி: விராத் கோலி (கேப்டன்), ரோகித் சர்மா, ஷிகர் தவான், கே.எல் ராகுல், ஷ்ரேயாஸ் ஐயர், மனிஷ் பாண்டே, ரிஷப் பாண்ட், ஷிவம் துபே, வாஷிங்டன் சுந்தர், ரவீந்திர ஜடேஜா, யுஸ்வேந்திர சஹால், குல்தீப் யாதவ், தீபல் சஹார், முகம்மது சமி, புவனேஷ் குமார்

ஒருநாள் தொடருக்கான இந்திய அணி: விராத் கோலி (கேப்டன்), ரோகித் சர்மா, ஷிகர் தவான், கே.எல்.ராகுல், ஷ்ரேயாஸ் ஐயர், மனிஷ் பாண்டே, ரிஷப் பாண்ட், ஷிவம் துபே, கேதர் ஜாதவ், ரவீந்திர ஜடேஜா, யுஸ்வேந்திர சஹால், குல்தீப் யாதவ், தீபக் சஹார், முகம்மது சமி, புவனேஷ் குமார்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

32 − 24 =