வருமான வரி அலுவலகத்தில் தீ விபத்து! வீரர்கள் போராடி தீயை அணைத்தனர்

டெல்லியில் உள்ள வருமான வரித்துறை அலுவலகத்தில் இன்று காலை தீ விபத்து ஏற்பட்டது. தீயணைப்பு வீரர்கள் போராடி தீயை அணைத்தனர்.

டெல்லியில் உள்ள வருமான வரி துறை அலுவலகத்தின் விற்பனை வரி வளாகத்தில் 13வது தளத்தில் இந்த தீ விபத்து நேரிட்டது. அந்த தளத்தில் உள்ள அறை எண் 115ல் தீ விபத்து ஏற்பட்டு உள்ளது.

தகவல் அறிந்ததும், ஐந்து தீயணைப்பு வாகனங்கள் சம்பவ இடத்திற்கு சென்று, தீயை போராடி அணைந்தன.

பணிக்கு வந்திருந்த ஊழியர்களில் தீ விபத்து பகுதியில் சிக்கியிருந்த ஏழு பேர் பத்திரமாக மீட்கபட்டனர். இந்த விபத்தில் யாருக்கும் காயம் எதுவும் ஏற்படவில்லை என்று தகவல்கள் தெரிவித்தன.

கடந்த ஏப்ரலில் வருமான வரித்துறை அலுவலகத்தில் உள்ள ஐ.பி. பவன் பகுதியருகே கட்டிடத்தில், 4வது தளத்தில் தீ விபத்து ஏற்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

25 − 16 =