அமெரிக்காவில் அடுத்தடுத்து பல விருதுகளை குவிக்கும் துணை முதல்வர் ஓ.பி.எஸ்.

அமெரிக்காவுக்கு அரசுமுறைப் பயணம் மேற்கொண்டுள்ள துணை முதல்வர் ஓ.பன்னீர் செல்வம், ஹூஸ்டன் நகரில் உள்ள ஸ்ரீ மீனாட்சி அம்மன் கோயிலில் சாமி தரிசனம் செய்தார்.

இதை தொடர்ந்து, கோவில் தேவஸ்தானம் சார்பில் புனரமைக்கப்பட்ட திருமண மண்டபத்தின் கல்வெட்டை துணை முதல்வர் ஓ.பி.எச். திறந்துவைத்தார். அங்குள்ள பல்வேறு தமிழ் அமைப்புகள் சார்பில் நடந்த விழாவில், ஓ.பி.எஸ். வருகை தந்த நவ.14ம் தேதியை “ஓபிஎஸ் நாள்” என அறிவித்து கவுரவம் செய்தனர்.

பின்னர், ஸ்ரீ பத்மினி ரங்கநாதன் ட்ரஸ்டி சார்பில் பண்பின் சிகரம் என்ற பட்டமும், மெட்ரோப்ளெக்ஸ் தமிழ் சங்கம் சார்பில் வீரத்தமிழன் என்ற பட்டமும் துணை முதல்வர் ஓ. பன்னீர்செல்வத்திற்கு வழங்கப்பட்டது.

வாஷிங்டன் நகரில் அமெரிக்க-இந்திய சிறிய நடுத்தர தொழில் முதலீட்டாளர் கவுன்சில் நிர்வாகிகளுடன் துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் ஆலோசனை நடத்தினார். முதலீடுகளுக்கு ஏற்ற மாநிலங்கள் பட்டியலில் தமிழகம் முதலிடத்தில் இருப்பதால் தொழில் தொடங்க முன்வர வேண்டும் என்று அவர் அழைப்பு விடுத்தார்.

முன்னதாக, சிகாகோவில் நடைபெற்ற விழாவில், துணை முதல்வர் ஓ.பி.எஸ்ஸுக்கு ‘ரைசிங் ஸ்டார்’ விருதும் தங்கத் தமிழ்மகன் விருதும் வழங்கப்பட்டுள்ளன. தமது அமெரிக்க பயணத்தில் பல்வேறு விருதுகளை துணை முதல்வர் ஓ.பி.எஸ். அள்ளிக் கொண்டு வருவது குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

79 − = 75