இங்கிலாந்து இளவரசர் சார்லஸ் நாளை இந்தியாவுக்கு வருகை

இங்கிலாந்து இளவரசர் சார்லஸ், அரசு முறை பயணமாக நாளை இந்தியாவுக்கு வருகை தரவுள்ளார். தமது பிறந்தநாளையும் அவர் இங்கு கொண்டாடவுள்ளார்.

தமது இந்திய பயணத்தின் போது, குடியரசுத்தலைவர் ராம்நாத் கோவிந்த் உள்ளிட்ட தலைவர்களை அவர் சந்தித்து, இருதரப்பு உறவுகள் குறித்து பேச்சுவார்த்தை நடத்துகிறார்.

அத்துடன், குருநானக்கின் 550வது பிறந்தநாளை முன்னிட்டு, இங்கிலாந்து வளர்ச்சியில் சீக்கியர்களின் பங்களிப்புக்கு நன்றி கூறும் வகையில், குருத்வாரா ஒன்றில் வழிபாடு நடத்துவார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், முதல் மற்றும் 2ஆம் உலகப்போரில் காமன்வெல்த் நாடுகளின் சார்பில் பங்கேற்று உயிரிழந்த இந்திய வீரர்களுக்கு அஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சியில், இங்கிலாந்து இளவரசர் சார்லஸ் கலந்து கொள்கிறார். தனது 71வது பிறந்தநாளில் (14 ஆம் தேதி) இந்தியாவிலேயே கொண்டாடவும் அவர் திட்டமிட்டுள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

5 + 3 =